ராம் சரண் மனைவி வளைகாப்பு! வைரலாகும் புகைப்படங்கள்...!

ராம் சரண் மனைவி வளைகாப்பு! வைரலாகும் புகைப்படங்கள்...!
X
திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர்கள் குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் உபாசனாவுக்கு இப்போது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக இருந்த ராம்சரண் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இப்போது இந்தியாவின் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆஸ்கர் வென்ற பாடலில் நடனமாடிய நாயகர்களில் ஒருவர் என்பதால் உலகம் முழுக்க இவரைத் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.


கடந்த 2007ம் ஆண்டு சிறுத்தா எனும் படத்தில் அறிமுகமானவர் இதுவரை 14 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இவரது 15வது படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்தது. ஆஸ்கர் வரைச் சென்றதால் இந்த படத்துக்கு அவ்வளவு புகழ் கிடைத்துள்ளது.


கடந்த 2012ம் ஆண்டு ராம்சரண் தொழிலதிபரின் மகளான உபாசனா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர்கள் குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் உபாசனாவுக்கு இப்போது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.







Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!