குக் வித் கோமாளி 3 பைனல்ஸில் ஏன் பங்கேற்கவில்லை: ரக்ஷன் விளக்கம்

விஜய் டிவி ரக்ஷன்.
Cook With Comali 3- விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் நிகழ்ச்சி மனதில் இடம் பிடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2, 3 சீசன்கள் வந்தன. அடுத்தடுத்த சீசன்களில் போட்டியாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டார்கள். கோமாளிகள், நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர் எல்லோருமே முதல் சீசனில் இருந்து ஒன்றாக பயணிக்கிறார்கள்.
அப்படி இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளருக்கு தொகுப்பாளராக சில நேரங்களில் போட்டியாளர்களுக்கு உதவியாளராக கோமாளிகளுடன் கோமாளியாக இருந்து பன்முகத்தை காட்டி வந்தவர் ரக்ஷன். இவர் 3வது சீசனின் இறுதி நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் என்ன என்பதே தெரியவில்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் ரக்ஷனிடம் கேட்க, அதற்கு அவர், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனா இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் இறுதி நிகழ்ச்சியில் வர முடியவில்லை என தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu