தொடங்கவிருக்கும் 'பிக்பாஸ்' ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் களமிறங்கப்போகும் ரக்‌ஷன்..?!

தொடங்கவிருக்கும் பிக்பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் களமிறங்கப்போகும் ரக்‌ஷன்..?!
X

விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன்.

நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரக்‌ஷன், அடுத்து தொடங்கப்போகும் 'பிக்பாஸ்' 6வது சீசனில் பங்கேற்கலாம்.?!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பரவலாக எல்லோர் மத்தியிலும் உலகம் முழுவதும் பெருத்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து ரசிக்கும் முக்கிய நிகழ்ச்சியாக பிரபலமானது என்பது மிகையல்ல.

மேலும், முதல் சீசன் தொடங்கி, கடந்த ஐந்தாவது சீசன் வரை வெற்றிபெறும் வெற்றியாளர் மட்டுமின்றி, அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பங்கேற்பாளர்க்கும் அதன்பிறகு, அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளும் வரவேற்பும் புகழும் பெரிய அளவில் அமைந்தது என்பதற்கு சொல்லத்தகுந்த உதாரணங்கள் நிறையவே உண்டு.

இந்நிலையில், ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கவிருக்கும் 'பிக்பாஸ்' ஆறாவது சீசனை வழக்கம் போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவிருக்கிறார்.

போட்டியாளர்கள் குறித்தான பேச்சு தற்போது தொடங்கி இருக்கும் நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்‌ஷன் ஆறாவது சீசனில் போட்டியாளராகக் களம் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்தாவது சீசன் மற்றும் ஓடிடி சீசனிலேயே அவர் உள்ளே போக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

இப்போது, 'குக் வித் கோமாளி' சீசன் முடிந்ததும் உடனே, 'பிக்பாஸ்' ஆரம்பிக்கப்படுகிறது என்பதால், ரக்‌ஷன் இதில் பங்கேற்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மேலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து ஸ்ருதிகா உள்ளிட்ட சிலரை 'பிக்பாஸ்' வீட்டுக்குள் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்