சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம்: வெளியானது அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம்: வெளியானது அறிவிப்பு
X

புதிய படத்தில் ரஜினியின் தோற்றம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை, நெல்சன் இயக்குகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் நடித்து வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு, அடுத்த படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். ரஜினியின் படத்தை, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன் இவர்களில் யாரேனும் இயக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ரஜினியின் 169வது படம் குறித்த அறிவிப்பை, சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டது. அதன்படி, இப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரல் படத்தின் பூஜையும், மே மாதத்தில் படப்பிடிப்பும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் நெல்சன், கோலமாவு கோகிலா படம் மூலம் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தையும் நெல்சன் இயக்கினார். அதை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!