கொச்சி ஏர்போர்ட்டில் சூப்பர் ஸ்டார்! தலைவர் மாஸ் டோய்!

கொச்சி ஏர்போர்ட்டில் சூப்பர் ஸ்டார்! தலைவர் மாஸ் டோய்!
X
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைகிறதாம். இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

ஜெயிலர் படப்பிடிப்புக்காக கொச்சி விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஸ்டைலான போஸில் கலக்கிய ரஜினியைப் பார்த்தவர்கள் பூரித்து போனார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இவர் நடிக்கும் படம் ஜெயிலர். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து மறுவாய்ப்பாக நெல்சனுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். அண்ணாத்த படத்தில் அதிக சம்பளம் கொடுத்திருந்த நிலையில், அதை ஈடுகட்ட ஜெயிலர் படத்துக்கான சம்பளத்தை ரஜினிகாந்த் குறைத்து நடிக்கிறார்.

ஜெயிலர் படத்தை அடுத்து தனது மகள் இயக்கும் படத்தில் கேமியோ ரோல் நடிக்கும் ரஜினிகாந்த் அந்த படத்துக்கு 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குநர் தசெ ஞானவேலின் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைகிறதாம். இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. 1 வாரம் படப்பிடிப்பு 1 வாரம் ஓய்வு என்று ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கொச்சி ஏர்போர்ட் சென்றிருக்கிறார். அங்கு அவர் ஸ்டைலாக வருவதைப் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். எஸ்கலேட்டரில் செம்ம ஸ்டைலாக வந்த ரஜினிகாந்த் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு பின்னால் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இருக்கிறார். இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைத்தள கணக்கில் பகிர்ந்து வருகின்றனர்.


ஜெயிலர் படத்தில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் ஆகியோரும் இருக்கின்றனர்.

சென்னையில் துவங்கிய ஜெயிலர் படப்பிடிப்பு, பின் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்றது. அங்கு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் ரஜினிகாந்துக்கு இருக்கும் காட்சிகளுடன் சில சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. இதனையடுத்து இப்போது கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இதனால் கொச்சிக்கு சென்றுள்ளது ஜெயிலர் படக்குழு.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!