Thalaivar 170 ரஜினி - ஞானவேல் படத்தின் கதை இதுவா? ரொம்ப பிரச்னையாகுமே?

Thalaivar 170 ரஜினி - ஞானவேல் படத்தின் கதை இதுவா? ரொம்ப பிரச்னையாகுமே?
X
முள்ளும் மலரும் மாதிரி படங்களில் வரும் ரஜினியின் கதாபாத்திரம் போல எதார்த்தம் நிறைந்த பாத்திரமாக ரஜினிகாந்த் நடிக்கிறார் என்கிறார்கள்.

இந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவரது ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் சில படங்கள் பெரிய அளவில் போகாவிட்டாலும், இப்போது இவர் நடித்து வரும் ஜெயிலர் படத்துக்கு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சுனில், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தினை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணனும் தமன்னாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். தமன்னாவுக்கு தனியே ஒரு அறிமுக பாடலும் இருக்கிறதாம்.

இந்த படத்தை அடுத்து லால் சலாம் படத்திலும் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவரது மகள் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருக்கு உதவும் முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடிக்க 7 நாட்கள் டேட் கொடுத்திருந்தாராம் ரஜினி. இப்போது இரண்டு படங்களுக்கும் டப்பிங் பணிகள் மட்டும் பாக்கி இருக்கிறது. ஜெயிலர் படத்தில் ஏற்கனவே டப்பிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனையும் அடுத்து ரஜினி நடிக்கும் படம் தலைவர் 170. இந்த படத்தைதான் த செ ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தின் கதைகுறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 90களில் நடைபெற்ற போலி என்கவுண்டர் குறித்தான முக்கிய தகவல்களைத் திரட்டி அதிலுள்ள பல விசயங்களை திரில்லராக சொல்லும் படமாக இது அமையுமாம். காவல்துறையில் பணிபுரியும் நபராக ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாராம்.

முள்ளும் மலரும் மாதிரி படங்களில் வரும் ரஜினியின் கதாபாத்திரம் போல எதார்த்தம் நிறைந்த பாத்திரமாக ரஜினிகாந்த் நடிக்கிறார் என்கிறார்கள்.

Tags

Next Story