/* */

ரீமேக் படமா.. வேண்டவே வேண்டாம்! ரிஜக்ட் செய்த ரஜினி.. ஓகே சொன்ன சிம்பு!

குசேலன் படமும் ரஜினிகாந்த் படம் எனும் பெயரில் விளம்பரம் செய்யப்பட்டது. இதுவும் ரீமேக் படம்தான். ஆனால் ஒரிஜினலில் பசுபதி கதாபாத்திரத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். அதில் ரஜினிகாந்த் கதாபாத்திரம் ஒரு சூப்பர் ஸ்டாராக மட்டுமே வந்து செல்லும்.

HIGHLIGHTS

ரீமேக் படமா.. வேண்டவே வேண்டாம்! ரிஜக்ட் செய்த ரஜினி.. ஓகே சொன்ன சிம்பு!
X

தன்னுடைய கதாபாத்திரம் கெத்தானதுதான் ஆனா கதையின் நாயகன் ஒரு புதுமுகம் என்று தெரிந்ததும் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார் என்று தகவல் பரவி வருகிறது. மேலும் இது ரீமேக் படம் என்பதால் தான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிம்புவின் மாஸான நடிப்பில் பத்து தல படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஃப்டி படத்தின் கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கொஞ்சம் வித்தியாசமாக சிம்புவுக்கு அதிக காட்சிகள் வைத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஃப்டி. இந்த படத்தில் நாயகன் கௌதம் தான் என்றாலும் சிம்பு கதாபாத்திரம் மாஸாக இருக்கும். படம் வெளியான பிறகு இந்த கதாபாத்திரத்தை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.


மஃப்டி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதேநேரம் இந்த படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதிக்கவில்லை என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு யோசித்து முடிவு செய்வதாக கூறிய ரஜினிகாந்த் இது ரீமேக் படம் என்பதால் தான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.


சிம்புவுக்கு முன்னரே ரஜினியிடம் தான் இந்த படத்தின் கதையை முதலில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தனக்கு ஏற்கனவே குசேலன் படத்தில் கிடைத்ததே போதும் என்று உஷாராகிவிட்டாராம். தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டும் கேட்பதாகவும் நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று நேரடியாகவே சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள்.


குசேலன் படமும் ரஜினிகாந்த் படம் எனும் பெயரில் விளம்பரம் செய்யப்பட்டது. இதுவும் ரீமேக் படம்தான். ஆனால் ஒரிஜினலில் பசுபதி கதாபாத்திரத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். அதில் ரஜினிகாந்த் கதாபாத்திரம் ஒரு சூப்பர் ஸ்டாராக மட்டுமே வந்து செல்லும். ஆனால் குசேலன் படத்தின் விளம்பரங்களில் இது ரஜினி படம் என்றே விளம்பரம் செய்ய அது பின்அடியாக இருந்துவிட்டது.


சரி தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்தும் சிம்பு ஏன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு பதில் சிம்புவே ஆடியோ லாஞ்சில் தெரிவித்துவிட்டார். சிம்பு இந்த படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே கௌதம்தான் என்று அவரே கூறிவிட்டார். சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது. சிம்பு ரசிகர்கள் மாஸான காட்சிகளுக்காக இந்த படத்தை பார்க்கலாம். ஆனால் இது வழக்கமான சிம்புவுக்கான படமாக இருக்காது. வெந்து தணிந்தது காடு போல இதுவும் கதைக்கான படம்தான்.

Updated On: 23 March 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...