ரஜினிகாந்த் புகழ்ந்த 'நட்சத்திரம் நகர்கிறது'

ரஜினிகாந்த் புகழ்ந்த நட்சத்திரம் நகர்கிறது
X

இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வெளியாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை ரஜினிகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அண்மையில் வெள்ளித்திரையில் வெளியானது 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தில், காதலை மையக் கருவாகக் கொண்டு, சமூகத்தில் நடைபெற்றுவரும் ஆணவக்கொலைகள் குறித்து பேசியிருப்பதோடு, தன் பாலின ஈர்ப்பாளர்களின் காதல் குறித்தும் பேசியிருப்பார். எனவேதான், இப்படம் காதல் குறித்த விவாதத்தை சமூகத்தில் பலமாக ஏற்படுத்தியுள்ளது.அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இப்படம் குறித்த விவாதம் பெரும் புயலைக் கிளப்பியதுபோல் சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில்தான், நடிகர் ரஜனிகாந்த், படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பா.ரஞ்சித்தை மிகையாகப் பாராட்டியுள்ளார். ரஜினியின் பாராட்டில் மகிழ்ந்த ரஞ்சித், தன் சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் இயக்குநர் பா.ரஞ்சித், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தைப் பார்த்துவிட்டு அவர், என்னைப் பாராட்டியது, மிகவும் கவர்ந்தது. சிறந்த நடிப்பு, இயக்கம், நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை என அனைத்துமே இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே, இந்தப்படம்தான் சிறந்த படம் என்று ரஜினி பாராட்டடுத் தெரிவித்தார்" என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!