நடிகர் ரகுவரனின் இறப்பிற்கு செல்லாத ரஜினி: இது ஒரு தாயின் கண்ணீர் கடிதம்

நடிகர் ரகுவரனின் இறப்பிற்கு செல்லாத ரஜினி: இது ஒரு தாயின் கண்ணீர் கடிதம்
X

பாட்ஷா படத்தி ரஜினி காந்த் -ரகுவரன்  தோன்றும் காட்சி.

தனது மகன் இறப்பிற்கு வராதது ஏன் என கேட்டு ரகுவரனின் தாயார் கடிதம் எழுதியது பற்றிய தகவல் கிடைத்து உள்ளது.

வில்லனாக நடித்திருந்தாலும் பலருடைய பாராட்டுகளை பெற்று வந்த நடிகர் ரகுவரன் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். அதனாலே இருவரும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர்.

ஆனாலும் நடிகர் ரகுவரனின் இறப்பிற்கு ரஜினிகாந்த் வரவில்லையாம். அது குறித்து ரகுவரனின் அம்மா ரஜினிகாந்த்க்கு ஒரு கடிதம் எழுதியதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

rajinikanth today news in tamil, today rajinikanth news in tamil,தமிழ் திரை உலகில் தனித்துவமான நடிகர்களில் ரகுவரனும் ஒருவர். இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து அதிகமான திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார்.

rajinikanth today news in tamil, today rajinikanth news in tamil,இவருடைய தனித்துவமான குரல் பலரையும் கவர்ந்திருந்தது. அதனாலேயே இப்போதும் கூட பல பிரபலங்களும் இவருடைய வாய்ஸில் பேசி மிமிக்ரி செய்து வருகிறார்கள். அதற்கு அதிகமான வரவேற்பும் இருக்கிறது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அதிகமான பாராட்டுகளையும் பெற்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் உடன் அதிகமான திரைப்படங்களில் ரகுவரன் நடித்திருப்பார். அதிலும் ரஜினிகாந்த நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற பாட்ஷா முதலான திரைப்படங்களுக்கு ரகுவரன் தான் வில்லன்.

rajinikanth today news in tamil, today rajinikanth news in tamil,ரகுவரன் ரஜினிகாந்த் திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலே அந்த திரைப்படம் வெற்றி பெற்று விடும் என்பது கூட அந்த நேரத்தில் ஒரு நம்பிக்கையாக இருந்தது. அந்த அளவிற்கு இருவரும் கூட்டணியாக பல திரைப்படங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரகுவரன் நடித்திருந்தார். அதுவரைக்கும் வில்லனாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இவருக்குள் இப்படி ஒரு பாசமான அப்பாவும் இருக்கிறாரா? என்று வியக்க வைத்திருந்தது. அது அவருடைய கடைசி படம் என்று ரகுவரனுக்கும் தெரிந்திருக்காது. ரசிகர்களுக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து இப்போதும் பீல் பண்ணும் விதமாக நடித்திருந்தார்.

rajinikanth today news in tamil, today rajinikanth news in tamil,யாரடி நீ மோகினி திரைப்படத்திலும் இறந்து போவது போன்று காட்சிகள் இருக்கும். அதே போலவே அவரும் இறந்து போய் விட்டார். இந்த நிலையில் நடிகர் ரகுவரன் இறந்து பல வருடங்கள் கழித்து ரகுவரன் அம்மா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில், ரகுவரன் இறப்பிற்கு பிறகு நான் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கடிதத்தை போஸ்ட் பண்ணவே இல்லை" என்று கூறி இருக்கிறார்.

அந்த கடிதத்தில்," நீங்களும் ரகுவரனும் நெருங்கிய நண்பர்களாக தானே இருந்தீங்க. ஆனா அவனுடைய இறப்பிற்கு நீங்க வரலையே. ரகுவரனோடு நடித்த பலரும் வந்திருந்தார்கள். அதுபோல ரகுவரனால் உதவி பெற்றவர்கள் பலரும் வந்து கதறி இருந்தார்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய உச்ச நண்பரின் இறப்பிற்கு வரவில்லை என்று வருத்தமாக கடிதம் எழுதியதாகவும், பிறகு வேண்டாம் அவர் பெரிய இடத்தில் இருக்கிறார். நாம் இது அனுப்புனா சரிப்பட்டு வராது என்று அதை அனுப்பாமல் விட்டு விட்டதாகவும் நடிகர் ரகுவரனின் அம்மா கூறியிருக்கிறார்.

rajinikanth today news in tamil, today rajinikanth news in tamil,அது மட்டுமல்லாமல் வில்லனாக நடித்து வந்த ரகுவரன் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத்தான் இருந்திருக்கிறார். தன்னுடைய சம்பளத்தில் அதிகமான பணத்தை காது கேட்காதவர்களுக்கும், கால் இல்லாதவர்களுக்கும் ஆபரேஷன் செய்வதற்காக அதிகமாக செலவழித்து இருந்தாராம். அந்த வகையில் அவருடைய இறப்பிற்கு ரகுவரனால் பயன் பெற்ற பலரும் வந்து கதறி அழுதிருந்தார்கள் என்றும் ரகுவரனின் அம்மா கூறியிருக்கிறார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது