சினிமாவுக்கு ரஜினி முழுக்கு? டிஸ்சார்ஜ் ஆகாததன் பகீர் பின்னணி
ரஜினி
திரைத்துறையின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதை, அண்மையில் டெல்லியில் ரஜினிகாந்த் பெற்றார். அந்த உற்சாகத்தோடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை ரஜினிகாந்த் சந்தித்து, வாழ்த்து பெற்றுவிட்டு சென்னை திரும்பினார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு முன்பாக தனது பேரக்குழந்தைகள் உள்ளிட்டோருடன் அந்த படத்தையும் பார்த்து, நன்றாக வந்திருப்பதாக உற்சாகம் பொங்க ரஜினி கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், நேற்று மாலை ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமான ஒரு மருத்துவப்பரிசோதனை தான் என்று, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், முதலில் தெரிவித்தார்.
டிஸ்சார்ஜ் தாமதம் ஏன்?
எனினும், இரவோடு இரவாக ரஜினிக்கு நெருங்கிய உறவினர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஒய்.ஜி. மகேந்திரன், ரவி ராகவேந்திரா உள்ளிட்டோர் மருத்துவமனையில் ரஜினியை போய் பார்த்தனர். இன்று காலை ரஜினி டிஸ்சார்ஜ் ஆவார் என்று லதா ரஜினிகாந்த், நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார். ஆனாலும், ஏற்கனவே குடும்பத்தினர் தெரிவித்தபடி ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. இதன் பின்னணியில் ஒருசில தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது, நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இன்பார்க்ட் என்பது, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால், திசுக்கள் இறந்து போவதை குறிக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
வேறுவகையில் சொல்லப் போனால், ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிப்பதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர். வயதானவர்களுக்கு ஏற்படும் இந்த நோயால், பாதிப்பு இருக்காது என்றாலும், ஓய்வு கட்டாயம் தேவையாம்.
இனி முழுஓய்வு கட்டாயம்
எனவே, ரஜினி இனி முழு ஓய்வில் இருப்பது அவசியம் என்று, அவருக்கு வேண்டப்பட்டவர்கள் கருதுகின்றனர். 70,வயதாகும் ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே, அண்ணாத்த பட ரிலீசுக்கு பிறகு நடிப்புக்கு ரஜினி முழுக்கு போட்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை என்று, ஒரு பேச்சு உலவுகிறது. இது, ரஜினி ரசிகர்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
எப்படியானாலும், அண்ணாத்த பட ரிலீசுக்கு முன்பாக ரஜினி வீடு திரும்பினாலே போதும் என்பதே, ரஜினி ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu