விஜய்க்கு பதிலடியா ஹூக்கும் பாடல்? இப்படி இறங்கிட்டாரே சூப்பர் ஸ்டார்?

விஜய்க்கு பதிலடியா ஹூக்கும் பாடல்? இப்படி இறங்கிட்டாரே சூப்பர் ஸ்டார்?
X
ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பாடலில் விஜய்யை தாக்கியுள்ளதாக அவரது ரசிகர்கள் டிவிட்டரில் சண்டை போட்டு வருகின்றனர்.

விஜய்க்கு பதிலடியா ஹூக்கும் பாடல்? இப்படி இறங்கிட்டாரே சூப்பர் ஸ்டார்?விஜய்யை நேரடியாக எதிர்க்க முடியாமல் இப்படி பாடல் வைத்து எதிர்க்கிறார் என விஜய் ரசிகர்களே கோபப்படும் அளவுக்கு ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். அதிக படங்களில் மிக அதிக சம்பளத்துக்கு நடித்து இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக இருந்தவர் ரஜினிகாந்த். அதன்பிறகு பல நடிகர்கள் அந்த இடத்துக்கு போட்டி போட்டாலும் விஜய் மட்டுமே ரஜினியை ஓவர்டேக் செய்தார். பாலிவுட், டோலிவுட் திரைப்பட நடிகர்கள் பலர் அதைவிட அதிகமாக சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்தாலும், தமிழைப் பொறுத்தவரையில் விஜய்தான் நம்பர் 1 என வாரிசு படத்தின் தயாரிப்பாளரை வைத்தே பேச வைத்தார் விஜய்.


இதில் ரஜினிகாந்த் கடுப்பானதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. மற்ற எல்லார் படங்களுக்கும் வாழ்த்து சொல்லும் ரஜினிகாந்த் விஜய் படங்களையும் விஜய் சார்ந்த நடிகர்கள், இயக்குநர்களின் படங்களையும் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் விஜய்யை நேரடியாக தாக்கி பாடல் வரிகளை வைக்கச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த் என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் உருண்டு புரண்டு சண்டை போட்டு வருகின்றனர்.

பாடலாசிரியர்தானே பாடல் எழுதுவார் என்று கேட்பது ஒருவிதத்தில் நியாயமாக தோன்றினாலும் அது ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்குமா என்பது யோசிக்க வைக்கும் கேள்விதான். இந்த ஹூக்கும் பாடலில் குறிப்பாக

உன் அலும்ப பாத்தவன்

உன் ங்கொப்பன் விசில கேட்டவன்

என்கிற வரிகளில் நேரடியாக விஜய்யைத் தான் சாடுகிறார் என்று பேசி வருகிறார்கள். இதுமட்டுமின்றி, அடுத்த வரிகளில்

பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு என அவரைத் தான் சொல்கிறார் என்பதை உறுதி செய்துவிட்டார் என்றும் பேசுகின்றனர்.


என்னதான் பாட்டில் இப்படி விமர்சனம் செய்வது போல வரிகள் வைத்தாலும் நிஜம் கோலிவுட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களுக்குமே தெரியும். யார் நம்பர் 1 என்பது தற்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்பதும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தெரியும் அவர்களே முடிவு செய்யட்டும் என விஜய் ரசிகர்கள் டிவீட் செய்து வருகின்றனர்.

Tags

Next Story