LEO எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.. வாழ்த்து கூறிய ரஜினி!

LEO எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.. வாழ்த்து கூறிய ரஜினி!
X
லியோ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

லியோ படம் வெற்றி பெற வாழ்த்து கூறிய ரஜினி தனக்கு வருத்தமாக இருப்பதாக கூறிச் சென்றார்.

நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் த செ ஞானவேலுடன் இணைகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெய்பீம் படம் எடுத்த இயக்குநர் த செ ஞானவேல் சொன்ன கதை பிடித்துப் போகவே அவருடன் இணைவதாக அறிவித்தார்.

லைகா தயாரிக்கும் இந்த படத்துக்கும் அனிருத்தான் இசை. அதற்கு முன்னதாக ரஜினிகாந்த் தனது மகள் இயக்கத்தில் வெளியான லால்சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 படத்துக்காக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்க இருக்கிறார்கள்.

திருவனந்தபுரத்தில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்தடுத்து திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடையே பேசினார்.

புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்காக 1977ல் வந்தேன். 46 வருஷம் கடந்துவிட்டது. அதன் பிறகு இப்போது தான் வருகிறேன். ரொம்ப அன்பான மக்கள். பார்ப்பதற்கே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாரிடமும் போட்டோ எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் லியோ படத்துக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய தனது வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் தனது அடுத்த இயக்குநராக லோகேஷ் கனகராஜை தேர்ந்தெடுத்துள்ளார். அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தலைவர் 171 என்று அழைக்கப்படுகிறது. அது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தொடங்கும் என லோகேஷ் கனகராஜே பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story