அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு
X
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

'தர்பார்' படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விவேகா எழுதிய பாட்டிற்கு மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்..

'அண்ணாத்த' திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!