தற்போது உடல்நிலை எப்படி உள்ளது? நடிகர் ரஜினி வெளியிட்ட தகவல்

தற்போது உடல்நிலை எப்படி உள்ளது? நடிகர் ரஜினி வெளியிட்ட தகவல்
X

ரஜினிகாந்த்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர், தற்போது குணமடைந்து வருவதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளப் பதிவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி தற்போது குணமடைந்து வருகிறேன். புனித் ராஜ்குமார் இறந்த செய்தி எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் தெரிந்தது. என் கண் முன்னாள் வளர்ந்த குழந்தை அவர். பெயர் புகழ் என கன்னட சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்.

திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28ம் தேதி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், தனது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியின் மூலம், புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!