44 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் வெளியாகும் கமல்-ரஜினி படம்

பைல் படம்.
Rajini kamal new movie-உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவள் அப்படித்தான் படம் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்றளவு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை இருவரின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு குறைந்தபாடில்லை.
Rajini kamal new movie-இந்த இரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போதும் திரையரங்குகள் விழாக்கோலமாக காட்சியளிக்கும். கமல்-ரஜினி இருவரும் தற்போது தனித்தனியாக தான் நடித்து வருகின்றனர். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த இருவரும் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான பொழுதுபோக்கான படங்கள் மற்றும் பெண்களை மையப்படுத்திய படங்கள் போன்றவற்றிலும் இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவள் அப்படித்தான் படம் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரஜினி மற்றும் கமல் ரசிகர்களிடையே உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu