லியோவுக்கு ஆப்பு..! கலாவைத் தூண்டி விட்ட ரஜினி!

லியோ படத்தின் அதிகாலை காட்சி ரத்துக்கு பின் ரஜினிகாந்த் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறன் மூலம் இதனை ரஜினி செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
மாஸ்டர் படத்துக்கு பிறகு தளபதி விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, நண்பராக கௌதம் மேனன், அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, வில்லன்களாக மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெளியான 3 பாடல்கள்
படம் சென்னை, காஷ்மீர், கொடைக்கானல் என 3 இடங்களில் கிட்டத்தட்ட 90 நாட்கள் முழுமையாக ஷூட்டிங் நிறைவு பெற்று, டப்பிங் பணிகளையும் முடித்துக் கொண்டு தற்போது கடைசி கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.
படத்திலிருந்து நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.
புகை, ரத்தம், கெட்டவார்த்தை
ஆரம்பத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்காக பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் டிரைலரில் விஜய்யை கெட்ட வார்த்தைபேச வைத்துவிட்டார் லோகி என அவரையும் எதிர்க்க ஒரு கட்டத்தில் அதை மியூட் செய்து வெளியிட்டுள்ளனர். இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் வெளியாக சரியாக 1 வாரம் இருக்கிறது என்று நினைக்கும்போது, 4 மணி காட்சிகள் மட்டுமின்றி, 7 மணி, 9 மணி காட்சிகளும் இல்லாமல் 11 மணிக்குதான் முதல் காட்சி திரையிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இருப்பதாக தகவல் கிளம்ப, விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து வந்த அறிவிப்பில் படக்குழுவிடமிருந்து கேட்கப்பட்ட அனுமதி கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், படத்தை 4, 7 மணிக்கு திரையிட அனுமதி அளிப்பதாக அந்த உத்தரவு கூற, விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
ரஜினியின் பொறாமை
இதனையடுத்து ஒரு குண்டைத் தூக்கி போட்டனர். அதாவது முதல் காட்சி என்பது 4 மணிக்குதான் அல்லது 7 மணிக்கு தான் என்பதை குறிப்பிடாமல் அந்த உத்தரவு வந்திருப்பதை எடுத்துக் காட்டி, அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பதற்கே அனுமதி என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், படம் 4 மணி, 7 மணிக்கு வெளியாகாமல் இருக்க, கலாநிதி மாறன் மூலமாக காய் நகர்த்துகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்துக்கு அதிகாலை காட்சி கிடைக்காத நிலையில், ரஜினி வருத்தப்பட்டதாகவும், அதேநேரம் லியோ படத்துக்கு அதிகாலை காட்சி கொடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கலாநிதி மாறன் மூலம் காய் நகர்த்தினார் எனும் பொருள்படும்படி பிஸ்மி பேசியிருக்கிறார்.
ரசிகர்களின் பதிலடி
ரஜினி இப்படிபட்டவரா என விஜய் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர். தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவுக்கும் சன் தொலைக்காட்சி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறனுக்கும் இருக்கும் உறவு பற்றி பலருக்கும் தெரியும். இதனை வைத்து அரசிடம் பேசி ரஜினி தில்லுமுல்லு செய்கிறாரா என விஜய் ரசிகர்களில் சிலர் பேசி வருகின்றனர். இன்னும் சிலரோ அவர் அப்படி செய்யும் ஆள் இல்லை. கலாநிதி மாறனிடம் ரஜினிகாந்த் பேசியது பிஸ்மிக்கு எப்படி தெரிந்தது ? ஒட்டு கேட்டாரா என பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu