Bigg Boss season 6: வைரலான ராஜா ராபர்ட், ராணி ரச்சிதா போஸ்

பிக் பாஸ் தமிழ்
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
என்ன தான் ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் விலகி செல்ல நினைத்தாலும், பிக் பாஸ் வீடு மற்றும் ஹவுஸ்மேட்ஸ் அவர்களை சும்மா விடுவதாக தெரியவில்லை. பிக் பாஸ் வீடு இந்த வாரம் ராயல் மியூசியமாக மாறி உள்ளது. அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தான் தேர்வாகி ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ராஜா ராணி கெட் அப்பில் ராபர்ட் மற்றும் ரச்சிதா வில் விடும் காட்சியில், ரச்சிதாவின் பின்னால் நின்று ராபர்ட் வில் வித்தை கற்றுத்தருவதாக அமைந்த போஸுடன், பாகுபலி பிரபாஸ் - அனுஷ்கா வில் அம்பு விடும் காட்சிகளுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா இருவருக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கும் போது பிக்பாஸும் இந்த டாஸ்கில் கோர்த்து விட்டுள்ளார்.
ராணி வேடத்தில் கம்பீரமாக ரச்சிதாவும், ராஜா வேடத்தில் ராபர்ட் மாஸ்டரும் வீட்டில் உலா வருகின்றனர். இதில் படைத்தளபதியாக அசீம் செயல்பட்டு வரும் நிலையில், அவரின் நடிப்பினைக் கண்டால் பாகுபலியை கண்முன் நிறுத்துவதாக உள்ளது.
ராபர்ட் மாஸ்டர் நேரடியாகவே ரச்சிதாவிடம் சும்மா இந்த வீட்டுக்குள்ளாவது காதலிப்பது போல நடிக்கலாமே என கேட்க, அதற்கு பிக் பாஸ் வீட்டில் தான் நடிக்க வரவில்லை என்றும் சுயமாகவே இருக்க விரும்புகிறேன் என்று ரச்சிதா நெத்தியடியாக சொல்லி விட்டார்.
பிக் பாஸ் வீடு ராயல் மியூசியமாக மாறிய நிலையில், ராஜ குடும்பத்தினருக்கு தனியாக ஸ்பெஷல் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும், கிங் சைஸ் பெட் ஒன்று இருந்ததும் ராபர்ட் மாஸ்டருக்கு விபரீத ஆசை வந்து விட்டது. அதை புரிந்து கொண்ட அசீம், ராஜா ராணி இருவருமே ஒரே பெட்டில் தான் படுக்க வேண்டும் என சொல்ல, ரச்சிதாவுக்கு கோபம் வந்து விட்டது.
என்ன சொன்னீர்.. எனக் கேட்டுக் கொண்டே ஜாலியாக அசீமின் கழுத்தை நெறிக்கவே போய்விட்டார் ரச்சிதா. ராபர்ட் மாஸ்டர் உடன் எல்லாம் படுக்க மாட்டேன். தனியாக படுத்துக் கொள்கிறேன் என சொன்னதுமே ராபர்ட் மாஸ்டர் முகம் பியூஸ் போன பல்ப் ஆகி விட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu