சரவணனிடம் வசமாக சிக்கிய ஆதி - ராஜா ராணி 2 எபிசோடு அப்டேட்
raja rani 2 episode update- விறுவிறுப்பான காட்சிகளுடன் ராஜா ராணி 2 எபிசோடு அப்டேட் ஆனது.
Raja Rani Tamil Serial - விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி, 'பெண்ணை பிடிச்சிருக்கு' என சொல்ல, அந்த பெண், 'தனியாக பேச வேண்டும்' என்க, பிறகு இருவரும் ரூமுக்குள் சொல்ல ஜெசி அங்கு இருப்பதை பார்த்து, ஆதி அதிர்ச்சியடைகிறான். 'இங்கு, எதற்கு வந்தே, பிளாக்மெயில் பண்ண பாக்குறியா?' என கேட்க, ஜெசி 'என் வயித்துல உன் குழந்தை வளருது.' என சொல்ல, 'அதுக்கு எனக்கும் சம்மந்தமில்லை' என ஆதி சொல்ல, 'செருப்பால அடிப்பேன்' என, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றுகிறது.
பிறகு ஆதி, 'நீ கர்ப்பமான விஷயத்தை, முதலில் என்கிட்ட சொல்லி இருக்கணும். ஆனா, நீ என்ன பண்ணிணே?, உனக்கு எனக்கும் சாப்டர் க்ளோஸ். அபார்ஷன் பண்ணிட்டு வேலைய பாரு,' என சொல்லி, கதவை திறக்க அனைவரும் வெளியே இருப்பது பார்த்து ஆதி அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு சரவணன் ஏற்கனவே பெண் வீட்டாரை சந்தித்து, இப்படி ஒரு பிரச்சினை சென்று கொண்டிருப்பதை சொல்லி, ஜெசியை அந்த இடத்திற்கு வரவைத்த விஷயம் தெரிகிறது.
இப்படியான நிலையில், வீட்டுக்கு வந்ததும் சரவணன் ஆதியை போட்டு வெளுக்கிறான். 'இந்த வீட்ல இருக்கற எல்லாரும், என்ன நினைச்சே, முட்டா பசங்க எது சொன்னாலும் நம்பிடுவாங்கன்னு நெனச்சியா,' என திட்டுகிறார். அவருடைய அப்பா, 'இனி நீ என் புள்ளைன்னு எங்கேயும் சொல்லாத, நான் உன்னோட அப்பா ன்னு, எங்கேயும் சொல்லிக்க மாட்டேன்,' என கூறுகிறார். சந்தியா, 'இந்த பிரச்சனையை விடுங்க. ஜெஸ்ஸி பத்தி யோசிக்கலாம்,' என சொல்ல, இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் சரவணன், 'ஆதிக்கும் ஜெசிக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும்' என கூறுகிறான்.
இப்படி, விறுவிறுப்பான காட்சிகளுடன், ராஜா ராணி எபிசோடு 2 எபிசோடு அப்பேட் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu