ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறும் அர்ச்சனா: காரணம் என்ன?

Raja Rani 2 Archana
Raja Rani 2 Archana-ராஜா ராணி 2 சீரியலில் ஏற்கனவே ஹீரோயினாக நடித்து வந்த ஆல்யா மானசா வெளியேறிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரியா என்ற புது நடிகை ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். அவரை ஆரம்பத்தில் விமர்சித்த ரசிகர்கள் தற்போது படிப்படியாக அவரை ஏற்றுக் கொண்டு விட்டனர்.
இந்நிலையில் தற்போது வில்லியாக நடித்து வந்த அர்ச்சனா ராஜா ராணி 2ல் இருந்து வெளியேறி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் வெளியேறியதற்கான காரணத்தை அர்ச்சனா கூறி இருக்கிறார். "வாழ்க்கை ஆச்சர்யங்கள் நிறைத்தது என எல்லோருக்கும் தெரியும். என் வாழ்க்கையும் அடுத்தகட்டத்திற்கு செல்கிறது. நான் ராஜா ராணி 2ஐ மிஸ் செய்வேன். அடுத்த முயற்சியில் சந்திப்போம்" என அர்ச்சனா கூறி உள்ளார்.
அர்ச்சனா என்ன காரணம் என தெளிவாக குறிப்பிடாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனால் அவர் புது சீரியலில் நடிக்கிறாரா, அல்லது திருமணம் செய்து கொள்ள போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu