Raja rani 2 archana real name - ராஜா ராணி 2 சீரியல் அர்ச்சனா நிஜப் பெயரே இதுதாங்க...!

Raja rani 2 archana real name - ராஜா ராணி 2 சீரியல் அர்ச்சனா நிஜப் பெயரே இதுதாங்க...!
X

Raja rani 2 archana real name- ராஜா ராணி 2 சீரியல் நடிகை விஜே அர்ச்சனா (கோப்பு படம்)

Raja rani 2 archana real name- விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில், ராஜா ராணி 2 சீரியல், பார்வையாளர்களின் மனம் கவர்ந்தது. அதில், நடித்த நடிகை விஜே அர்ச்சனா பற்றிய விவரங்களை அறிவோம்.

Raja rani 2 archana real name- ராஜா ராணி 2- வில் நடித்தவர் விஜே அர்ச்சனா. இவர் ஒரு தொலைக்காட்சி நடிகை. வீடியோ ஜாக்கியாக இருந்தவர். மாடலிங் துறை சார்ந்தவர். அவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடிக்கிறார்.


அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ராஜா ராணி சீசன் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ‘கனவே கனவே’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். ராஜா ராணி 2 சீரியலில் நடித்ததுடன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘முரட்டு சிங்கிள்ஸ்’ ஷோவிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

அர்ச்சனாவை பற்றிய முழு தகவல்கள்

உண்மையான பெயர் - விஜே அர்ச்சனா

புனைப்பெயர் - அர்ச்சனா

பிறந்த தேதி - 11 நவம்பர் 1997

வயது - 23

பூர்வீகம் - சென்னை, தமிழ்நாடு

தற்போது - சென்னை, தமிழ்நாடு

கல்வித்தகுதி - பட்டதாரி

திருமணமாகாதவர்

தொழில் - நடிகை, மாடல், வி.ஜே

அறிமுகம் - ராஜா ராணி 2

பொழுதுபோக்குகள் - பயணம், ஷாப்பிங்


விஜே அர்ச்சனா சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சன் டிவியில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். இவர் ஆல்யா மானசாவுடன் இணைந்து ராஜா ராணி 2 சீரியலில் தொலைக்காட்சியில் அறிமுகமானார். சீரியலில் அர்ச்சனா என்ற கேரக்டர் ரோலில் நடிக்கிறார். யாஷிகா ஆனந்த் மற்றும் லல்லு போன்ற பிரபல பிரபலங்களுடன் விஜய் டிவி முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் நடித்தார்.


ராஜா ராணி சீரியலை பொருத்த வரை, அர்ச்சனா வில்லத்தனமான ஒரு கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். அத்தைக்கு பயந்த மருமகள் போல நடந்து கொண்டாலும், உண்மையில் குடும்பத்துக்குள் ஏற்படும் துன்பங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருப்பதே அர்ச்சனா தான். குறிப்பாக, தனது கணவரின் அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோரை பழிவாங்கும் நோக்கத்தில், அவர்கள் மீது கொண்ட பொறாமையால், குடும்பத்துக்குள் ஏதேனும் பிரச்னைகளை, மறைமுகமாக சதி வேலைகளை செய்து கொண்டே இருப்பார். பொய் சொல்லுவது, ஏமாற்றுவது, ஏதேனும் தகிடுதத்தம் செய்து குடும்பத்துக்குள் புதுப்புது பிரச்னைகளை கொண்டு வருவது, சீரியல் முழுவதும் இவரது கதாபாத்திரம் விறுவிறுப்பை, அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது என்றால், அதுதான் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்.


ஆனால், இவர் குடும்பத்துக்கு எதிராக அவர் செய்த சதி செயல்கள் அனைத்தும், ஒவ்வொரு கட்டத்திலும் வெளிவரும் நிலையில் கணவரிடமும், குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டு திருந்தி விடுவதாக கூறும் அர்ச்சனா, அடுத்த சில தினங்களில் மீண்டும் அதே சதி திட்டங்களை, குடும்பத்துக்கு எதிராக பிரச்னைகளை உருவாக்கி குளிர் காய்வதே இவரது கேரக்டராக இருந்தது. சிறப்பான தனது நடிப்பால், அந்த கேரக்டரை இவர், பார்வையாளர்கள் மத்தியில் பேச வைத்தது. ஆனால், அந்த சீரியலில் இருந்து அவர் சொந்த காரணங்களுக்காக, பாதியில் வெளியேறியது, ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.

Tags

Next Story
ai in future agriculture