கங்கனாவுக்கு பெத்த அமௌண்ட்.. ராகவாக்கு அதுல பாதிதானாம்!

கங்கனாவுக்கு பெத்த அமௌண்ட்.. ராகவாக்கு அதுல பாதிதானாம்!
X
கங்கனா ரனாவத்தை விட கம்மியான சம்பளத்துக்கு நடித்து கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ் என்கிற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பரவி வருகின்றது.

சந்திரமுகி 2 படத்துக்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் கங்கனா ரனாவத் வாங்கியதில் பாதிதான் என்று கூறப்படுகிறது.

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான திகில் படமான சந்திரமுகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இப்படம் மலையாளத்தில் வெளியான மணிசித்ரதாழு படத்தின் ரீமேக் ஆகும்.

2012 செப்டம்பரில், சந்திரமுகியின் தொடர்ச்சிக்கான திட்டம் இருப்பதாக வாசு அறிவித்தார். இருப்பினும், திட்டம் நிறைவேற பல ஆண்டுகள் ஆனது. ஜனவரி 2020 இல், வாசு அதன் தொடர்ச்சிக்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டதாகவும், ஒரு தயாரிப்பாளர் படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் படத்தின் கதை தயாராகி படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து இன்று ஒருவழியாக ரிலீஸ் ஆகிவிட்டது.

ரஜினியும் வடிவேலுவும் இணைந்து நடித்த காமெடி டிராக் காட்சிகளை பி வாசு சந்திரமுகி படத்தில் வைத்திருப்பார். அந்த படத்தின் வெற்றிக்கு இந்த காட்சிகள்தான் மிகப் பெரிய அளவில் காரணமாக அமைந்தது. ஆனால் அதையே மீண்டும் முயற்சித்து வடிவேலு - ராகவா லாரன்ஸ் இணையை நடிக்க வைத்த பி வாசு இம்முறை தோற்றுவிட்டார்.

ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) குடும்பத்தில் அடுத்தடுத்து அசம்பாவித சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பயத்தில் இருக்கும் அவர் தனது குடும்பம் மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு தங்களுடைய குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிடுகிறார்.

வேட்டைய புரம் அரண்மனைக்கு வரும் ரங்கநாயகியின் பெரிய குடும்பத்தினர் சந்திரமுகி பங்களாவில் தங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்கின்றனர். அங்கு ஏற்கனவே வந்து டரியலான கதாபாத்திரம் முருகேஷனும் இந்த குடும்பத்துடன் இணைகிறார்.

வழக்கம் போல அந்த சந்திரமுகி அறைக்கு யாரும் போகக் கூடாது என்று சொல்ல, அந்த பங்களா குறித்த அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, இந்த முறை உண்மையான சந்திரமுகியே இறங்கி வந்து ஆடுகிறது. அந்த பேய் யாருக்கும் பயப்படாமல் இருக்க, அப்ப இவர்தான் சரியான ஆள் என வேட்டையனை வரவழைக்கிறார்கள்.

அடுத்து என்ன நடந்திருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த கதைதான். வெறும் பேய் கதையை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் பேயாக நடித்த கங்கனாவுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் 12 கோடி ரூபாய்தான் வாங்கியுள்ளாராம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!