வடிவேலு அண்ணனுடன் மீண்டும் இணைகிறேன்… ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி..!

வடிவேலு அண்ணனுடன் மீண்டும் இணைகிறேன்… ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி..!
X

நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு.

நடிகர் வடிவேலுவுடன் 'சந்திரமுகி-2' -ல் நடிப்பது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் டிவீட் செய்துள்ளார்.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி-2' உருவாவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் பிரபு, சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக அப்படத்தை தயாரித்திருந்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சுமார் 20 ஆண்டுகள் கடந்த இந்தநிலையில், தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும், 'சந்திரமுகி 2' படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " என்னுடைய அடுத்த ப்ராஜக்ட் 'சந்திரமுகி 2' என்று அறிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. வடிவேலு அண்ணனுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய குருவான நடிகர் ரஜினிகாந்த் சாருக்கு இந்த சமயத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த டைட்டிலை கொடுத்த சிவாஜி புரொடக்‌ஷன்ஸுக்கு நன்றி. லைகா புரொடக்ஷன் உடன் இணைந்து பணியாற்றுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

'சந்திரமுகி'' பார்ட் 1-ஐ இயக்கிய பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். மேலும், வடிவேலு பார்ட்-2விலும் நகைச்சுவையில் கலக்கவிருக்கிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!