ராதிகா என் அம்மா அல்ல..! நடிகை வரலட்சுமி
பைல் படம்.
நடிகர் சரத்குமார் தமிழ்த்திரையுலகில் எதிர்மறை நாயகனாக நடிக்கத் தொடங்கி, 'சூரியன்' திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்து, அதிலிருந்து நாயகனாக வலம் வந்தார். 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'சூரிய வம்சம்' உள்ளிட்ட பல படங்கள் இன்றளவும் சரத்குமாரின் தனிப்பட்ட முத்திரைப் படங்களாக அவருக்கென திரையுலகில் ஒரு பெயரையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கித் தந்தவை. தனது கல்லூரிக் காலங்களில் இருபதாவது வயதிலேயே 'மிஸ்டர் மெட்ராஸ்' என்று ஆணழகன் பட்டம் வென்றவர்.
சுமார் 130 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சரத்குமார், ஓர் அரசியல்வாதியும் ஆவார். நடிகை நக்மாவின் மீது கொண்ட காதலால் ஏற்பட்ட குடும்பப் பிணக்கில் தனது மனைவி சாயாவுடன் மணமுறிவு பெற்றார். சரத்குமார் - சாயா தம்பதியரின் மகள்கள்தான் நடிகை வரலட்சுமியும் அவரது தங்கை பூஜாவும். முதல்மனைவியிடம் மணமுறிவு பெற்ற சரத்குமார், 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை மணந்தார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்தநிலையில், அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகை வரலட்சுமி, "யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதெப்படி ராதிகா என் அம்மாவாக முடியும். என் அம்மா சாயாதான். ராதிகா என் தந்தையின் இரண்டாம் மனைவி. அவ்வளவுதான்.
என்னிடம் எப்போதுமே பலரும் கேட்கும் கேள்வி, 'ராதிகாவை ஏன் நீங்கள் அம்மா என்று அழைப்பதில்லை?' எனபதுதான். ராதிகாவை அம்மா என்று அழைக்க முடியாது. ஏனென்றால் அவர் என் அம்மா அல்ல.
அவர் எப்போதும் எனக்கு ஆண்டிதான். அவரை அப்படித்தான் அழைத்துக்கொண்டிருக்கிறறேன். அழைப்பேன். அவர் மீது எனக்கு ஒரு நல்ல மரியாதையும் பாசமும் உண்டு. அவருக்கும் என் மீது அவ்வாறே உண்டு. அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. அவரையும் எனது அம்மாவையும் ஒரே மாதிரியாகத்தான் நினைக்கிறேன்… மதிக்கிறேன்" என்று பளிச்சென்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu