வருகிறது ராயன் 2! கதை என்ன தெரியுமா?

வருகிறது ராயன் 2!  கதை என்ன தெரியுமா?
X
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பது தெரியவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பது தெரியவந்துள்ளது. படம் வெளியான முதல்நாளே சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடி அசத்திய படக்குழு, இரண்டாவது நாளிலேயே படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை கசியவிட்டுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்திருக்கும் படம் ராயன். தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் தங்கள் பங்குக்கு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக தனுஷ், துஷாரா கதாபாத்திரங்கள் திரைப்படம் முடிந்தும் மனதில் நிற்கின்றன.

ஆரம்பகட்டத்தில் திருநெல்வேலி கிராமத்தில் நடக்கும் காட்சிகள் இயல்பாகவும் நெஞ்சுக்கு நெருக்கமாகவும் அமைந்துள்ளது படத்தின் பிளஸ். ஆனால் அதே குடும்பம் நெல்லை பாஷையிலிருந்து சென்னை பாஷை பேச ஆரம்பித்ததும் அந்த குடும்ப உணர்வுகளும் பாசமும் இல்லையே என்பது போல ஆகிவிட்டது. தனுஷ் - துஷாரா இடையே இருக்கும் அண்ணன் தங்கை கெமிஸ்ட்ரி, மற்ற இருவருடனும் இருவருக்கும் இல்லை.

துரை அண்ணனாக வரும் சரவணனை கொல்லும் காட்சிக்கு முன்னதாக, நடு அண்ணன் குத்துப்பட்டு கிடக்கும்போது அவனுக்கு தையல் போடும் துஷாரா, தனுஷுக்கு கால் வரும்போது சிறப்பாக நடித்திருப்பார்கள். அந்த காட்சியும் விறுவிறுப்பாக நன்றாக இருக்கும்.

ராயன் அண்ணன், தன் மற்ற அண்ணன்களால் குத்துப்பட்டு கிடக்கையில், தங்கையாக அவன் உயிர் காக்க போராடும் காட்சியும் சிறப்பாக இருக்கும். இதுபோல சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் படத்தின் மீது ரசிகர்களுக்கு பிடித்தமோ உணர்வு ரீதியான தொடர்போ இல்லாத நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் சரியாக அமையவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தில் ராயன் 10 வருசத்துக்கு முன்னாடி என்ன பண்ணினான் தெரியுமா? ராயன் யார் தெரியுமா என கேள்வி மேல் கேள்வி கேட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்த நிலையில், கடைசி வரை அது என்னனு சொல்லலியே என வடிவேலு மாதிரி புலம்பிக்கொண்டே வெளியில் வந்தனர். ஆனால் அந்த பின்கதை குறித்தும், ராயன் தம்பி தங்கையை எப்படி வளர்த்தான் அவனுக்கு என்னென்ன கஷ்டம் வந்தது என்பதை குறித்தும் அடுத்த பாகத்தில் சொல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ai solutions for small business