ராயன் படம் செய்த சாதனை! ஆஸ்கருக்கே போயிடிச்சாமே!

ராயன் படம் செய்த சாதனை! ஆஸ்கருக்கே போயிடிச்சாமே!
ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம்பெற தேர்வாகி இருக்கிறது.

தனுஷ் இயக்கி நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி வரும் ராயன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததுடன் ஆஸ்கருக்கும் சென்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தனுஷ் நடிப்பில் அவரது 50வது படம் ராயன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரின் அண்ணன் செல்வராகவனும் இணைந்து நடித்துள்ளார். தனுஷ் தவிர இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் வில்லன்களாக சரவணன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அமர்க்களப்படுத்தியுள்ளது.

7 நாட்களின் முடிவில் படம் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. இதனால் தனுஷ் தனது 4வது படத்திலும் இந்த சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே அசுரன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களும் 100 கோடி வசூலை கடந்திருந்தது. தமிழ் சினிமாவில் ஏ சான்றிதழ் பெற்று 100 கோடியைத் தொட்ட முதல் படம் ராயன்தான் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம்பெற தேர்வாகி இருப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷின் ராயன் படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story