ராயன் 100 கோடி! சாதனை பட்டியலில் இணைந்த தனுஷ்!

ராயன் 100 கோடி! சாதனை பட்டியலில் இணைந்த தனுஷ்!
X
தனுஷ் நடிப்பில் ஏற்கனவே அசுரன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களும் நூறு கோடி பட்டியலில் இணைந்திருந்தது.

நூறு கோடி நாயகன் பட்டியலில் இணைந்தார் நடிகர் தனுஷ். அவரின் ராயன் திரைப்படமும் நூறு கோடி வசூல் திரைப்பட பட்டியலில் இணைந்துள்ளது. இதன்மூலம், தனுஷின் நான்காவது படமாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் ஏற்கனவே அசுரன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களும் நூறு கோடி பட்டியலில் இணைந்திருந்தது.

தனுஷே இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுடன், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தம்பிகள், தங்கையை வளர்க்கும் பொறுப்புள்ள அண்ணனான ராயன், அவர்களுக்கு பிரச்னை என்று வரும்போது களத்தில் இறங்கி எதிரிகளை எதிர்த்து போராட துவங்குகிறான். ஆனால் எதிர்பாராதவிதமாக தன் தம்பிகளே துரோகிகளாக, அதன்பின் என்ன முடிவெடுத்தான் ராயன் என்பதுதான் படத்தின் கதை. ஆனால் இந்த படம் போதுமான அழுத்தத்தை தரவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

முழுக்க முழுக்க அடிதடி சண்டைகளை வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் குடும்ப ரசிகர்களுக்கு அதிக நெருக்கத்தைத் தராவிட்டாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் முதல் 3 நாட்களிலேயே 75 கோடி வசூலை நெருங்கிவிட்டது. ஆனால் அதன்பிறகு காற்று வாங்கத் தொடங்கியது. இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு இந்த படம் 100 கோடி வசூலைத் தொட்டுள்ளது.

தனுஷ் நடித்துள்ள 50வது படமான இது அவரின் சினிமா பயணத்தில் ஒரு சாதனை கல்லாக இடம்பிடித்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!