ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி மாற்றம்..!

ஆர்.பார்த்திபனின் இரவின் நிழல் ரிலீஸ் தேதி மாற்றம்..!
X

புதிய போஸ்டர்.

இயக்குநர் ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கான புதியபோஸ்டர் இன்று வெளியானது.

இயக்குநர் ஆர்.பார்த்திபன் எதிலும் புதுமை செய்பவர். அது, அவர் இயக்கும் படமாக இருந்தாலும் சரி... அவர் கலந்துகொள்ளும் ஏதேனும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி... அதில் பார்த்திபனின் தனித்த முத்திரை சிறக்கும்.

அந்தவகையில், 'ஒத்த செருப்பு அளவு 7' படத்திற்குப் பிறகு ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையைப் பெற்றதாகும்.

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

படம் நேற்று (24/06/2022) வெளியாக இருந்தநிலையில், எதிர்பாராத காரணங்களால் படம் வெளியாகவில்லை. இந்தநிலையில், தேதி குறிப்பிடாமல் படம் ஜூலை மாதம் ரிலீஸ் என்று ஆர்.பார்த்திபன் போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த பார்த்திபன் ரசிகர்கள் இப்போது, 'இரவின் நிழல்' ரிலீஸாகப் போகும் ஜூலை தேதியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!