தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம் "Production No.2"

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம் Production No.2
X

GV பிரகாஷ் குமார்- காயத்திரி சங்கர்  

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில்,GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்க, Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம், “Production No.2”

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்க, Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம், "Production No.2" !

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படம் அவரது வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் GV பிரகாஷ் குமார் நடிப்பில் அவர் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம், கிராமத்து பின்னணியில் , முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக உருவாகிறது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து, விரைவில் வெளியாகவுள்ள "மாமனிதன்" திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள காயத்திரி சங்கர், இப்படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் செவிலியர் பாத்திரத்தில் நடிக்கிறார். MS பாஸ்கர், கஞ்சா கருப்பு உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.


படம் குறித்து கூறுகையில்.. படத்தின் நாயகி கதாப்பாத்திரம் வாழ்க்கையின் மூன்று நிலைகளில் பயணிக்கிறது. பள்ளி மாணவி, வேலை செய்யும் பெண் மற்றும் ஒரு தாய். இந்த மூன்று நிலைகளிலும் தன் நடிப்பால் நியாயம் செய்வார் காயத்திரி. அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியராக இப்படத்தில் நடிக்கிறார். எனது முந்தைய திரைப்படங்களைப் போலவே, இப்படத்திலும் பெண் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் மற்றும் கதையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 2 முதல் தேனியில் முதல் கட்ட படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம். 25 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளோம் என்றார்.


தற்காலிகமாக "Production No.2" என அழைக்கப்படும் இப்படத்தை Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். இயக்குநர் சீனு ராமசாமியுடன் 'தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர் பறவை' போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!