ஆஸ்கர் விருது வழங்கும் விழா: பிரியங்கா சோப்ரா-ராம் சரண் போட்டோ ஷூட் வைரல்

பிரியங்கா சோபரா-ராம் சரண் நடத்திய போட்டோ ஷுட்.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக் கூத்து பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆஸ்கர் விழாவுக்காக ராம்சரண், ஜூனியர் என்டிஆர், தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் முகாமிட்டுள்ளனர்.
ஜூனியர் என்டிஆர் ஹாலிவுட் ரசிகர்களுடன் ஒரு பக்கம் போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் நடிகை பிரியங்கா சோப்ரா ராம்சரண் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன.
95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மார்ச் 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது விழாவை அகாடமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், யூடியூப் சேனல் மற்றும் ABC சேனல், ஸ்டார் மூவிஸ் உள்ளிட்டவற்றில் கண்டு ரசிக்கலாம்.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஆஸ்கர் விருது விழா மேடையில் இந்திய சினிமாவை சார்ந்த இயக்குநர் ராஜமெளலி தனது ஆர்ஆர்ஆர் படக்குழுவுடன் அலங்கரிக்க காத்திருக்கிறார். மேலும், ரெட் கார்ப்பெட்டில் நடக்க பிரியங்கா சோப்ராவும், ஆஸ்கர் விருது வழங்க தீபிகா படுகோனும், ஆஸ்கர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தங்கள் குடும்பத்தினருடன் ஆஸ்கர் நிகழ்ச்சிக்காக தயாராகி உள்ளனர்.
ஆஸ்கர் விழாவுக்கு ரெடியான பிரியங்கா சோப்ரா நேற்றே வெள்ளை நிற பஞ்சு போன்ற உடையை அணிந்து கொண்டு தனியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ராம்சரண் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன.
ராம்சரண் மற்றும் பிரியங்கா சோப்ரா சன்ஜீர் எனும் படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு அந்த படம் வெளியானது. இந்நிலையில், தற்போது 10 வருஷம் கழித்து இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை ரசிகர்கள் கம்பேர் செய்து 10 வருட சவால் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ராம்சரண், பிரியங்கா சோப்ரா போட்டோஷூட் நடத்திய நிலையில், கூடவே ராம்சரணின் மனைவி உபசனாவும் செம க்யூட்டாக டிரெஸ் பண்ணிக் கொண்டு நடத்திய போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் ராம்சரண், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், ஒரே ஹோட்டலில் தங்கி உள்ளனர். அங்கே அவர்கள் கேஷுவலாக எடுத்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. ஜூனியர் என்டிஆர், தீபிகா படுகோன் எல்லாம் கூடிய சீக்கிரமே இவர்களுடன் இணைந்து விடுவார்களா என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu