பைத்தியமா அவன்? யாரைச் சொன்னார் பிரேம்ஜி!

பைத்தியமா அவன்? யாரைச் சொன்னார் பிரேம்ஜி!
X
பைத்தியமா அவன்? என மீம் போட்டு போலி செய்தியை பரப்பியவரைத் தாக்கிய பிரேம்ஜி!

வெங்கட் பிரபு படத்தில் பிரேம்ஜி இருக்கக்கூடாது என உத்தரவிட்டதாக வெளியான பதிவில் பிரேம்ஜி பைத்தியமா அவன் என மீம் ஒன்றை பதிவிட்டு சமூக வலைத்தளத்தை அதிர வைத்துள்ளார்.

சினிமாபட்டி எனும் டிவிட்டர் தளத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நபர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் அடுத்து வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த விசயம். இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

இந்த படத்தில் வழக்கம்போல வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம்ஜியை நடிக்க வைக்கக் கூடாது என விஜய் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை வெங்கட் பிரபுவே தெரிவித்ததாக இந்த பதிவில் கூறுகிறார் சினிமாபட்டி.

இந்த பதிவில் பதிலளித்துள்ள பிரேம்ஜி அதில் வடிவேலு பைத்தியமா இவன் என பேசும் மீம் ஜிஃப்பை பதிவிட்டுள்ளார்.



அதன்பிறகுதான் இந்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது . வெங்கட் பிரபு அப்படி எந்த பதிவிலும், பேட்டியிலும் குறிப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள ரஜினி ரசிகர்கள், விஜய்யை தாக்கும் வகையில் இப்படி பதிவிட்டுள்ளதாக தங்களது குழு மூலம் பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர்.

பிரேம்ஜி பைத்தியமா அவன் என்று யாரைக் கூறுகிறார் ஒருவேளை தன்னை படத்திலிருந்து நீக்க சொன்ன பெரிய நடிகரை கூறுகிறாரா என்பது போல கட்டமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதனால் டிவிட்டர் களம் விஜய் Vs ரஜினி என ரசிகர்கள் மோதலுக்கு தயாராகி வருகிறது.


இதுவரை லோகேஷ் கனகராஜை டம்மி எனவும் ஓவர்ரேட்டடு எனவும் கூறிவந்தவர்கள் அவரால் கமல்ஹாசன், விஜய் ஆகியோரின் சுமாரான படங்களை அதிக வசூல் என கட்டமைக்கிறார்கள் என கூறி வந்த நிலையில், இப்போது ரஜினிகாந்துடன் இணைவதால் பழைய ட்வீட்களை டெலிட் செய்து வருகின்றனர். இப்போது லியோ படம் படுதோல்வி அடையும் எனவும் நெல்சனுக்கு வாழ்வு கொடுத்தது போல லோகேஷுக்கு வாழ்வு கொடுப்பார் ரஜினி என பேசி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!