Pradeep Antony யார் இந்த பிரதீப் ஆண்டனி?

Pradeep Antony யார் இந்த பிரதீப் ஆண்டனி?
X
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டுள்ள நடிகர் பிரதீப் ஆண்டனி குறித்த தகவல்கள் இதோ!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆகிய பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் பிரதீப் ஆண்டனி யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

பிரதீப் ஆண்டனி யார்?

சென்னை பிறந்த பிரதீப் ஆண்டனி நடிப்பின் மீது தீராத ஆர்வத்தில் இருந்தவர். பல முயற்சிக்கு பிறகு அருவி படத்தின் மூலம் அடையாளப்பட்டார். அதன் பிறகு வாழ் படத்தில் நடித்தார். வாழ் படத்தில் பிரதீப்பின் நடிப்பு மெருகேறியிருந்ததாக பலரும் கூறினர்.

பிரதீப் ஆண்டனியை இன்னும் பரவலாக அறிய செய்தது டாடா திரைப்படம்தான். கவின், அபர்ணா தாஸ் ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது அனைவரும் அறிந்தது. அந்தப் படத்தில் கவினின் டீமில் ஒருவராகவும், அபர்ணா தாஸை க்ரஷ்ஷாக நினைத்துக்கொண்டும் நடித்திருப்பார். குறிப்பாக கவினின் மனைவிதான் அபர்ணா தாஸ் என்பது தெரியாமல் கவினிடமே அபர்ணாவை பற்றி பேசும் இடத்தில் தனது நடிப்பில் அப்ளாஸை அள்ளியிருந்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் ஆண்டனி

பிரதீப் ஆண்டனி கவினின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். பிக்பாஸ் மூலம் எப்படி கவின் ரீச் ஆனாரோ அதேபோல் நாமும் ரீச்சாகிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

பிரதீப் ஆண்டனியின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் ஆண்டனி நுழைந்ததை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிரதீப் ஆண்டனி ஒரு திறமையான நடிகர் என்பதால், அவர் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ஆண்டனியின் வருகை பிக்பாஸ் சீசன் 7-க்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆண் போட்டியாளர்கள்:

விஜய் வர்மா

சரவண விக்ரம்

கூல் சுரேஷ்

யுகேந்திரன்

நிக்சன்

பிரதீப் ஆண்டனி

மணி சந்திரா

விஷ்ணு விஜய்

பாவா செல்லத் துரை

பெண் போட்டியாளர்கள்:

ஐஷு விசித்ரா

ரவீனா

பூர்ணிமா ரவி

ஜோவிகா

வினுஷா தேவி

அக்ஷயா உதயகுமார்

மாயா கிருஷ்ணன்

அனன்யா ராவ்

இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ரூல்ஸுகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன மாதிரியான ரூல்ஸ்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு