திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபுதேவா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபுதேவா சாமி தரிசனம்
X

திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த பிரபுதேவா.

பிரபல நடன இயக்குனரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா, திருப்பதியில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

ஒருகாலத்தில் நடிகை நயன்தாராவுடன் கிசுகிசுக்கப்பட்டவர், பிரபுதேவா. அதன்பின்னர், இருவரும் பிரிந்தனர். திரைப்படங்களிலும், இந்தி படங்கள் பக்கமும் பிரபுதேவாவின் கவனம் திரும்பியது.

இந்த சூழலில், பிரபு தேவா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் வெளியே வந்த அவருக்கு, கோயில் வளாகத்துக்குள் இருக்கும் ரங்கநாயக மண்டபத்தில், தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தரிசனத்திற்கு பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த பிரபுதேவாவை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!