600 கோடி ஆதிபுருஷ்... பிரபாஸின் சம்பளம் மட்டும் இவ்ளோ கோடியா?

Adipurush Prabhas Salary
X

Adipurush Prabhas Salary

Adipurush Prabhas Salary-600 கோடி ரூபாய் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிக்க பிரபாஸின் சம்பளம் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

Adipurush Prabhas Salary-பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்க பேமஸ் ஆன பிரபாஸ், தனது சம்பளத்தையும் கடகடவென உயர்த்திவிட்டார். பாகுபலி படத்துக்காக இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து அவர் வாங்கிய சம்பளம் 25 கோடி ரூபாய்தான். ஆனால் ஆதிபுருஷ் படத்துக்கு அவரின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

பாகுபலி படங்களில் நடித்து முடிக்க மட்டும் கிட்டத்தட்ட 5 வருடங்களை ஒதுக்கியிருந்தார் பிரபாஸ். அதன்பிறகு அவர் நடித்த படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. இதனால் அவரது சம்பளம் உயர்ந்த வேகத்திலேயே குறைந்தது. ஆனாலும் ஆதிபுருஷ் படத்துக்கு எதிர்பார்க்காத சம்பளத்தை பெற்றிருக்கிறார் பிரபாஸ்.

ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ஜோடியாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் என பெரிய நட்சத்திரங்களும் படத்தில் இருக்கின்றனர். ஆனாலும் படத்துக்கு போதிய வரவேற்பு இல்லாமல் விமர்சனங்களுக்கே ஆளானது. அதிலும் கேலியும் கிண்டலும் படத்துக்கு கிடைத்து இருப்பதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

ஆதிபுருஷ் படத்துக்காக பிரபாஸுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தால் கிட்டத்தட்ட 4ல் 1 பங்கு பிரபாஸின் சம்பளத்துக்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு முடிவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தாலும் இது முன்பதிவு, தெலுங்கு பதிப்புகளுக்கான தொகைதான் அதிகம். மற்ற மொழிகளில் கடுமையான அடியைத் தான் பெற்றிருக்கிறது ஆதிபுருஷ்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!