தள்ளிப்போகும் 'பொன்னியின் செல்வன்' முன்னோட்ட வெளியீட்டு விழா..!

தள்ளிப்போகும் பொன்னியின் செல்வன் முன்னோட்ட வெளியீட்டு விழா..!
X

பைல் படம்.

Ponniyin Selvan Film -இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' பட முன்னோட்ட விழா, தஞ்சாவூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Ponniyin Selvan Film - இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படம்தான் மறைந்த எழுத்தாளர் கல்கியின் கதையான 'பொன்னியின் செல்வன்'. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்தினம். இதன் முதல் பாகம் செப்டம்பரில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஜூலை முதல் வாரத்தில் தஞ்சாவூரில் மிகப் பிரமாண்டமாக படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது எதிபாராதவிதமாக, விழா ரத்தாகியுள்ளது. ஆயினும், ஜூலை மாத இறுதியில் விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!