பொன்னியின் செல்வன் டிரைலர் ரிலீஸ் தேதி!

பொன்னியின் செல்வன் டிரைலர் ரிலீஸ் தேதி!
X
ஏப்ரல் 5ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது மார்ச் 29ம் தேதியே இந்த விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிரைலர் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. டிரைலர் இல்லையென்றாலும் டீசராவது இப்போது வெளியிட்டிருக்க வேண்டாமா என்று கேட்டு வருகின்றனர் சிலர். இந்நிலையில் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ponniyin selvan 2 trailer release date


மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டே வந்துவிட்ட நிலையில், இப்போது படத்துக்கான புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். ponniyin selvan 2 audio launch


முதல் அப்டேட்டாக பாடல் வெளியானது. அகநக எனத் துவங்கும் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடலைத் தொடர்ந்து இன்னும் இரண்டு பாடல்கள் படத்தில் இருக்கின்றவாம். இவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ponniyin selvan 2 songs release date


விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோருடன் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் இணைந்து பட புரமோசன் பணிகளில் ஈடுபடவுள்ளனர். முக்கியமாக மும்பை, டெல்லி உள்ளிட்ட வடஇந்திய நகரங்களிலும் இம்முறை புரமோசனுக்கு திட்டமிட்டுள்ளனராம். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வட இந்திய நகரங்களில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் தமிழர்கள் தமிழ் என புரமோசன் பண்ணியதுதான் என்பதை படக்குழு உணர்ந்துள்ளதாம். இதனால் இம்முறை கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிக்கலாம் என்று யோசித்துள்ளனராம். ponniyin selvan 2 release date 2023


ஏப்ரல் 5ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இதனிடையே தற்போது மார்ச் 29ம் தேதி இவ்விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 டிரைலர் மொத்தம் 3.24 நிமிடங்கள் வருகிறதாம். இது கொஞ்சம் அதிகமான நீளமாக இருப்பதாக சிலர் கருதுகிறார்களாம். இதை டிரிம் செய்யலாமா அல்லது இப்படியே வெளியிடலாமா என யோசித்து வருகிறாராம் மணிரத்னம். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் இது நன்றாக இருப்பதாகவே கூறியிருக்கிறார். இதனால் அப்படியே வெளியிடவே அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!