பொன்னியின் செல்வன் 2 டிரைலர் ரிலீஸ் நேரம் இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் ரிலீஸ் நேரம் இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
X
Ponniyin Selvan Audio Launch Telecast Date-பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா - தேதி, நேரம், ஒளிபரப்பாகும் சேனல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இங்கே.

பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா LIVE UPDATE

Ponniyin Selvan Audio Launch Telecast Date-பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லைகா நிறுவன சமூக வலைத்தள கணக்குகளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


டிக்கெட்டுகள் | Ponniyin Selvan 2 Audio Launch Tickets

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு விருந்தினரைக் காணவும் ரசிகர்கள் அதிக அளவில் வந்து சேர்வார்கள் என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


சிறப்பு விருந்தினர் | Ponniyin Selvan 2 Audio Launch Chief Guest

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் நாள் நெருங்கி வரும் சூழ்நிலையில், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் வரவுள்ளதாக அறிவித்துள்ளது படத் தயாரிப்பு நிறுவனமான லைகா.

பொன்னியின் செல்வன் படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிரைலர் ஏன் இன்னும் வெளியாகவில்லை என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டை ஒரே நாளில் நடத்த திட்டமிட்டு மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புரமோசன் பணிகள் | Ponniyin Selvan 2 Promotions

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டே வந்துவிட்ட நிலையில், இப்போது படத்துக்கான புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர்.

முதல் பாடல் | Ponniyin Selvan 2 First Single

முதல் அப்டேட்டாக பாடல் வெளியானது. அகநக எனத் துவங்கும் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடலைத் தொடர்ந்து இன்னும் இரண்டு பாடல்கள் படத்தில் இருக்கின்றவாம். இவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோருடன் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் இணைந்து பட புரமோசன் பணிகளில் ஈடுபடவுள்ளனர். முக்கியமாக மும்பை, டெல்லி உள்ளிட்ட வடஇந்திய நகரங்களிலும் இம்முறை புரமோசனுக்கு திட்டமிட்டுள்ளனராம். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வட இந்திய நகரங்களில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் தமிழர்கள் தமிழ் என புரமோசன் பண்ணியதுதான் என்பதை படக்குழு உணர்ந்துள்ளதாம். இதனால் இம்முறை கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிக்கலாம் என்று யோசித்துள்ளனராம்.

டிரைலர் வெளியீட்டு விழா தேதி | Ponniyin Selvan 2 Trailer Release date

மார்ச் 29ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மேலும் ஆர்வப்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 டிரைலர் மொத்தம் 3.24 நிமிடங்கள் வருகிறதாம். இது கொஞ்சம் அதிகமான நீளமாக இருப்பதாக சிலர் கருதுகிறார்களாம். இதை டிரிம் செய்யலாமா அல்லது இப்படியே வெளியிடலாமா என யோசித்து வருகிறாராம் மணிரத்னம். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் இது நன்றாக இருப்பதாகவே கூறியிருக்கிறார். இதனால் அப்படியே வெளியிடவே அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

இசை வெளியீட்டு விழா தேதி | Ponniyin Selvan 2 Audio Launch Date

பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றனவாம். இந்த படத்துடன் கதையை முடிகிறது என்பதால் பலருக்குமான காம்பினேசன் காட்சிகள் இந்த படத்தில் வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மக்கள். ஏற்கனவே ஜெயம் ரவி - கார்த்தி, விக்ரம் - விக்ரம் பிரபு, விக்ரம் - கார்த்தி ஆகியோருக்கான காம்பினேசன் காட்சிகளும் படத்தில் பேசப்பட்டன.

ஒளிபரப்பாகும் நாள் | Ponniyin Selvan 2 Audio Launch telecasting date

இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா உடனடியாக எந்த சேனலிலும் ஒளிபரப்பாகாது. அதனை வேறொரு நாளில் அநேகமாக ஞாயிற்றுக் கிழமையில் ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 9ம் தேதி இதை ஒளிபரப்ப வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஒளிபரப்பாகும் சேனல் | Ponniyin Selvan 2 Audio Launch telecasting Channel

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பு செய்யும் சேனல் எது என்பது நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விசயம்தான். சன்டிவி தான் இந்த ஒளிபரப்பு உரிமையைப் பெற்றிருக்கிறது என்பதால் விரைவில் தேதி அறிவிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!