/* */

வந்தியத்தேவன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

வந்தியத்தேவன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு
X

வந்தியத்தேவன் (பைல் படம்)

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்திருந்தது.


இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இத்திரைப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது.


முதல் பாகமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. மேலும் இத்திரைப்படத்தின் முதல் பாடலான ’அக நக’ மார்ச் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இந்நிலையில் இத்திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். அவருக்கான ஆடை, அணிகலன்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன, தேர்வு செய்யப்பட்டன போன்றவை இந்த மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த மேக்கிங் வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 18 March 2023 3:15 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..