'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா இடமாற்றம்..!
தமிழ் மக்களில் அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை வரலாற்றுப் புதினங்கள் வாசிப்போர் மனங்களில் அழுத்தமான ஆசனமிட்டு அமர்ந்திருக்கும் புதினம்தான் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. எம்.ஜி.ஆரில் தொடங்கி கமல்ஹாசன் வரை பலரும் அப்புதினத்தை திரைப்படமாக எடுக்க, அதற்கான முயற்சியை முன்னெடுத்தார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் அது படமாக முழுமை பெறாமல் போனது.
இந்தநிலையில்தான், திரைத்துறையில் பலரது பெருங்கனவாகக் கருதப்பட்ட 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்குநர் மணிரத்னம் தற்போது, நிஜமாக்கி இருக்கிறார். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என இந்தியத் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்க 'பொன்னியின் செல்வன்' புதினத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என க்ளிம்ப்ஸ் வீடியோவோடு இதனைப் பகிர்ந்திருக்கிறது படக்குழு. இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் சோழர்கள் போர்க்களத்தில் கொடியோடு நிற்கும்படி இருக்க, சாகச 'பயணத்துக்கு தயாராகுங்கள்! சோழர்கள் வருகிறார்கள்..!' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழாவினை இந்த மாதம் 7ம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் மிகப்பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், தஞ்சை பெரிய கோயிலில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ராசி இல்லை என்ற சினிமா வட்டாரத்தின் சென்டிமெண்ட் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு சென்னையிலேயே பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu