'பொன்னியின் செல்வன்' - பிரமிக்க வைக்கும் புரமோஷன்கள்..!
Ponniyin Selvan Film- இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' வெள்ளித்திரையில் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், முதல் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனையும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இயக்குநர் மணிரத்னம் தலைமையில் லைகா நிறுவனம் மேற்கொண்டு வரும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் எல்லோரையும் புருவம் உயர்த்தி வியக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று முன் தினம்(24/09/2022) ஹைதராபாத்தில் நடந்த பரமோஷன் நிகச்சியின்போது பத்திரிகையார் சந்திப்பில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "நான், 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்த்த பின்பு, ஓடிடியில் வெளியாகும் வெளிநாட்டு பிரமாண்டப் படங்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.
நமது ஊரிலேயே இப்படிப்பட்ட கதைகள் இருக்கு. நம் நடிகர்களின் நடிப்பு அற்புதம். இதற்காக மணிரத்னம் சாருக்கும் படத்தில் நடித்த அத்தனை நடிக, நடிகையர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசி ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் பன்மடங்கு கூட்டியுள்ளார்.
அதேபோல், நேற்று முன்தினம் (25/09/2022) மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் பட புரமோஷன் நிகழ்ச்சியிலும் பேசிய நடிகர் விக்ரம், தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் கோயிலின் வரலாற்றுப் பெருமையையும் அக்கோயில் எப்படி கட்டப்பட்டது என்பது குறித்த பிரமிப்பான தகவல்களையும் ஆங்கிலத்தில் அழகாக விவரித்து அவரும் படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள முன்னணி திரையரங்குகளில் முதல் நாளுக்கான முன்பதிவு தொடங்கிய 24 மணிநேரத்தில் மொத்த டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu