தமிழில் வெளியான தரமான அரசியல் படங்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே..!

தமிழில் வெளியான தரமான அரசியல் படங்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே..!
X
தமிழில் வெளியான தரமான அரசியல் படங்கள் குறித்தும் அதன் எதிர்பார்ப்புகள், வரவேற்புகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தமிழில் வெளியான அரசியல் படங்களில் சிறந்த பத்து படங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

அமைதிப்படை (1994)


அமைதிப்படை 1994 ஆம் ஆண்டு வெளியான அரசியல் திரைப்படமாகும். இன்றளவும் ஒரு அரசியல் படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான அளவுகோலாக இது இருக்கிறது. நய்யாண்டி நக்கல் கலந்து இந்த படத்தை கொடுத்திருப்பார் மணிவண்ணன்.

சத்யராஜ் இரண்டு வேடங்களில் அசத்தியிருக்கும் இந்த படத்தில் ரஞ்சிதா, கஸ்தூரி, மணிவண்ணன், சுஜாதா, மலேசியா வாசுதேவன், மீசை முருகேசன், காந்திமதி ஆகியோர் நடித்திருப்பர்.

மகாநதி, வீட்ல விசேஷங்க, சேதுபதி ஐபிஎஸ் ஆகிய படங்களுடன் பொங்கல் விருந்தாக இந்த படம் வெளியானது. விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் இப்போதும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

எங்கு பார்க்கலாம்?

அமேசான் ப்ரைம் வீடியோஸ்

இருவர் (1997)


மணிரத்னம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர். நிகழ்கால அரசியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட படம் இது. மோகன்லால், பிரகாஷ்ராஜ் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்திருப்பார்கள். மோகன்லால் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருப்பார். ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருப்பர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில் முதலில் கமல்ஹாசன், சத்யராஜ், மிதுன் சக்ரவர்த்தி, அரவிந்த் சாமி, மம்மூட்டி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களையெல்லாம் தாண்டிதான் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

எங்கு பார்க்கலாம்?

அமேசான் ப்ரைம் வீடியோஸ்

ஆஹா தமிழ்

யூடியூப்

முதல்வன் (1999)


அர்ஜூன் ஒருநாள் முதல்வராக நடித்துள்ள படம் முதல்வன். இந்த படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன் ஜோடியாக மனீஷா கொய்ராலா நடித்திருப்பார். இவர்களுடன் ரகுவரன், வடிவேலு, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருப்பர்.

ஷங்கர் இயக்கத்தில் அவரது வழக்கமான டெம்ப்ளேட் படமாக இது அமைந்திருந்தது. ஆனால் அரசியல் கதையில் இது புதியதாகும்.

சாதாரண தொலைக்காட்சி நிருபர், ஒரு சவாலில் இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் என்கிற கற்பனை மிகவும் சுவாரஸ்யமானது. அதனை மக்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடினர்.

முடிவில் தன்னையும் அரசியல்வாதியாக மாற்றிவிட்டீர்களே என அர்ஜூன் வருத்தப்படும்போது, மணிவண்ணன் விடுங்க சார் நீங்க நல்லது பண்ண ஒரே ஒருவாட்டி அரசியல் பண்ணிருக்கீங்க என்பார். அதுதான் இந்த படத்தின் அடிநாதம்.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்.

தீபாவளி நாளில் வெளியான இந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது.

அர்ஜூனுக்கு முன்னதாக இந்த படத்தில் நடிக்க வேண்டியது ரஜினிகாந்த் தான். ஆனால் அவர் மறுத்துவிட்டார். பின் விஜய்யைத் தேடி வந்த வாய்ப்பை அவர் தட்டிக்கழித்தார். அதன்பிறகு கமல்ஹாசனையும் தொடர்புகொண்டார் ஷங்கர். அவரோ ஹேராம் படத்தில் பிஸியாக இருந்ததால் மறுத்துவிட்டார்.

எங்கு பார்க்கலாம்?

யூடியூப்

கோ (2011)


கே வி ஆனந்த் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான படம் கோ. இந்த படத்தில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்த்திகா, பியா பாஜ்பய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருப்பர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இப்போது வரை மிகப் பெரிய ஹிட்.

இளைஞர்கள் சேர்ந்து அரசியலைத் தூய்மைப் படுத்த அரசியிலில் நுழைகிறார்கள். அதற்குள் நுழைந்து ஆட்சியைப் பிடிக்க பல்வேறு துறைகளில் பணிபுரிகிறார்கள். ஒரு கட்டத்தில் அதில் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள் மீண்டும் அதே பழைய அரசியல் விளையாட்டுகளை ஆட ஆரம்பிக்க, இதை அறிந்துகொண்ட ஹீரோ என்ன செய்கிறார் என்பதே கதை.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

கோட்டா சீனிவாசராவ், அட்ச்யூத் குமார், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். ஒரு பாடலில் சூர்யா, கார்த்தி, தமன்னா, ஜெயம் ரவி, ஜெய், சசிகுமார், அதர்வா, சிவா, பரத், அப்பாஸ், சக்தி, அஞ்சலி, ஹாரிஸ் ஜெயராஜ், கிரிஷ், மதன் கார்க்கி என பலரும் கேமியோ செய்திருப்பார்கள்.

எங்கு பார்க்கலாம்?

ஹாட்ஸ்டார்

மெட்ராஸ் (2014)


கடந்த 2014ம் ஆண்டு வெளியான வித்தியாசமான அரசியல் திரைப்படம் மெட்ராஸ். பழம் தின்னு கொட்டைப் போட்ட அரசியல்வாதிகள் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். அதை அறிந்துகொண்ட ஒரு இளைஞன் அதை எதிர்த்து என்ன செய்ய போகிறான் என்பதை காட்டும் விதமாக மெட்ராஸ் படத்தை காட்டியிருப்பார் இயக்குநர் பா ரஞ்சித்.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

கார்த்தி, கேத்ரின் தெரேஸா, கலையரசன், சார்லஸ் வினோத், ரித்விகா, மைம் கோபி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பர்.

எங்கு பார்க்கலாம்?

ஹாட்ஸ்டார்

ஜோக்கர் (2016)


ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் நடித்துள்ள படம் ஜோக்கர். பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற இந்த படம், மிகப் பெரிய ஹிட்டானது.

மன்னர் மன்னன் என்பவர் தன்னைத் தானே இந்தியாவின் குடியரசுத் தலைவராக அறிவித்துக் கொண்டு, இங்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக போராடுவார். அவரது கிராமத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு முன்னின்று போராடி நியாயம் வாங்கித் தருவது இவர்களது டீமின் வழக்கம்.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

இதனால் என்னென்ன பிரச்னை ஏற்படுகிறது. ஹீரோ கடைசியில் என்ன ஆகிறார் என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.

எங்கு பார்க்கலாம்?

அமேசான் ப்ரைம் வீடியோஸ்

கொடி (2016)


தனுஷ் இரட்டை வேடத்தில் அசத்திய படம் கொடி. துரை செந்தில் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருப்பர்.

அடிமட்ட அரசியல் படமாக இந்த படம் உருவாகியிருக்கும். ஒரு பதவிக்காக எப்படியெல்லாம் அடித்துக் கொள்கிறார்கள். அதே பதவிக்காக ஒருத்தி தன் காதலனையே கொலை செய்கிறாள் என்று கூறி அதிர வைத்திருந்தார் துரை.

தனுஷ் - திரிஷா இடையேயான காதல் காட்சிகளும், தனுஷ் - அனுபமா இடையேயான ஹியூமர் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கும். கொடி பறக்குதா என்று கூறும்போது ஒரு பிஜிஎம் சந்தோஷ் நாராயணன் பிரித்து மேய்ந்திருப்பார். படம் வேற லெவலுக்கு இருக்கும்.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

எங்கு பார்க்கலாம்?

சன் நெக்ஸ்ட்

சர்க்கார் (2018)


ஏ ஆர் முருகதாஸ் - விஜய் இணையும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் உருவானது இந்த படம். தன் ஓட்டை வேறு யாரோ போட்ட காரணத்தால் அந்த தேர்தல் முடிவையே நிறுத்தி வைக்கும் மிகப் பெரிய கார்ப்பரேட் மான்ஸ்டராக விஜய் நடித்திருப்பார்.

இதனையடுத்து மக்களைத் திரட்டி ஏமாற்று வித்தைக் காட்டும் அரசியல்வாதிகளை எதிர்க்க துணிவார். இப்போரில் யார் வெல்கிறார்கள் என்பது படத்தின் கிளைமேக்ஸ். ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்தன.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருப்பர்.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

எங்கு பார்க்கலாம்?

நெட்பிளிக்ஸ்

எல்கேஜி (2019)


லால்குடி கருப்பையா காந்தி என்பதன் சுருக்கமே எல்கேஜி. ஒரு வார்டு கவுன்சிலர் என்னென்ன தில்லுமுள்ளுகளைச் செய்து முதல்வராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை.

கவுன்சிலராக ஆர் ஜே பாலாஜி, அவருக்கு உதவும் கார்ப்பரேட் நிர்வாகியாக பிரியா ஆனந்த், தோல்வியடைந்த அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத், ராம்ராஜ் பாண்டியனாக ஜே கே ரித்திஷ் என அனைவரும் நடிப்பில் அசத்தியிருப்பார்கள்.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

எங்கு பார்க்கலாம்?

ஆஹா தமிழ்

மாமன்னன் (2023)


உதயநிதி ஸ்டாலின், வடிவேலு இணைந்து நடித்துள்ள படம் மாமன்னன். பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த படம் பல அரசியல்களை பேசியது. ஆனாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஆனால் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் இது.

இந்த படத்தை முழுவதுமாக இணையத்தில் காண | டவுன்லோடு செய்ய இதைக் கிளிக் செய்யுங்கள்

எங்கு பார்க்கலாம்?

நெட்பிளிக்ஸ்

Tags

Next Story