நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு
X

 நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் சென்னை வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம், வரவேற்பை பெற்றது. எனினும், இதில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

வன்னியர் சங்கம் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக, அந்த அமைப்பு சார்பில், வக்கீல் நோட்டீசும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாமக மற்றும் வன்னியர் சங்கம் தரப்பில், நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துகள் வெளியான போதும், திரையுலக பிரபலங்கள், சில அரசியல் தலைவர்கள், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில், நடிகர் சூர்யாவின் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தரப்பில் பாதுகாப்பு எதுவும் கேட்கப்படவில்லை என்றும், அதே நேரம், உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அரசே இந்த பாதுகாப்பை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூரியாவின் தந்தை நடிகர் சிவகுமார், தம்பி கார்த்தி ஆகியோரும், இதே வீட்டில்தான் குடும்பத்துடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!