மீண்டும் உருவாகிறது பையா 2: ஹீரோ கார்த்தி?

மீண்டும் உருவாகிறது பையா 2: ஹீரோ கார்த்தி?
X

பையா படத்தில் கார்த்தி.

பையா 2 படத்தில் மீண்டும் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ‘பையா’. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’பையா 2’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தில் நடித்த கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தியின் 28வது படமாக இந்த படம் அமையும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கார்த்தி இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், தமன்னாவும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!