குளுகுளு படங்கள்... குவியும் கோடிகள்... இன்ஸ்டாவில் கலக்கும் சமந்தா..!

குளுகுளு படங்கள்... குவியும் கோடிகள்...  இன்ஸ்டாவில் கலக்கும் சமந்தா..!
X

நடிகை சமந்தா.

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கவர்ச்சிப் படங்கள் வியாபார நோக்கில் கோடிகளைக் குவிக்கிறது.

சின்னத்திரை பெரியதிரை என பெரும்பாலான நடிகைகள் தங்களது குளுகுளு கவர்ச்சிப் படங்களை அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றி பணம் பண்ணும் பணிகளை செம்மையாக செய்து வருகின்றனர். இதனால், கூடவே பிரபல நிறுவனங்களின் மாடலாகவும் வாய்ப்பைப் பெற்று கோடிக்கணக்கில் வருவாய்ப் பெற்று வளமாகிக் கொண்டுவருகின்றனர்.

அவ்வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரவென இயங்கி வருவோர் பட்டியலில் நடிகை சமந்தா முன்வரிசையில் உள்ளார். இவரைப் பின்தொடர்வோர் பட்டியல் சற்றேறக்குறைய 24 மில்லியனைக் கடந்து கொண்டிருக்கிறதாம். சமந்தாவின் பிரத்யேகமான போட்டோ ஷுட்களுக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம் எண்கிறார்கள்.

அண்மையில், பிரபல பிராண்ட் ஒன்றிற்காக பிகினி உடை அணிந்து விளம்பரத்திற்காக அப்படங்களைப் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இந்த ஒரு விளம்பரத்துக்கு மட்டும் சுமார் மூன்று கோடிக்கும் மேலாக சம்பளமாகப் பெற்றுள்ளார் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்