லோகேஷ் கனகராஜின் தங்கை என சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போட்டோ

லோகேஷ் கனகராஜின் தங்கை என சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போட்டோ
X

லோகேஷ் கனகராஜின் தங்கை என வைரலாகும் போட்டோ.

Lokesh kanagaraj sister-லோகேஷ் கனகராஜின் தங்கை என ஒரு பெண்ணின் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Lokesh kanagaraj sister-தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவரின் முதல் படமான மாநகரம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இரண்டு படங்களின் தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருப்பினும் வசூல் ரீதியாக அனைத்து செண்டர்களிலும் மாஸ்டர் படம் நல்ல வசூலை அள்ளியது. இதன் பிறகு லோகி இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தளபதி 67ல் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அறிவிப்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. நேற்று இப்படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு வந்த நிலையில் மீதமுள்ள நட்சத்திரங்களின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lokesh kanagaraj sister-இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை இவர் தான் என்று கூறி பெண் ஒருவரின் புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் பெயர் அவந்திகா கனகராஜ் என்பதினாலும், தளபதி 67 படத்தின் லோகேஷ் கனகராஜின் பதிவிற்கு, ரீ ட்விட் செய்ததாலும் ரசிகர்கள் அனைவரும் அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை என புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை இல்லை. அவர் 'தி ரூட்' எனும் நிறுவதின் டேலண்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்