அமெரிக்காவில் முன்னதாகவே வெளியாகும் பத்து தல!
கன்னடத்தில் வெற்றி பெற்ற படமான மஃப்டியின் தமிழ் ரீமேக்தான் பத்து தல. இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாகவே அமெரிக்காவில் வெளியாகவிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் மீண்டும் சிம்பு நடித்திருக்கிறார். ஏற்கனவே அக்கறையில நம்ம சத்தம் பாட்டு வேற லெவலுக்கு ஹிட் ஆகியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ராவடி பாடல் வெளியாகியுள்ளது.
சிம்புவின் அடுத்தடுத்த பட வெற்றிகளால் ஓடும் குதிரையாக மாறியிருக்கிறார் அவர். மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து இப்போது அவர் நடிப்பில் பத்து தல படம் வெளியாகி பட்டையைக் கிளப்ப காத்திருக்கிறது.
இந்த படத்தின் நாயகனாக சிம்பு புரமோட் செய்யப்பட்டாலும் இந்த படத்தில் அவர் நெகடிவ் கதாபாத்திரமே ஏற்று நடித்துள்ளார். இந்த படமே கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை கதாநாயகனாகக் கொண்டு உருவானதுதான். இருந்தாலும் பட விளம்பரத்துக்காக சிம்புவின் பெயர் பயன்படுத்தப்படுகிறது என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலும் முக்கியமாக இந்த படமே கௌதம் கார்த்திக்காக பண்ணியிருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறினார். அதுபோல் ரசிகர்களுக்கும் சில விசயங்களைக் கூறியிருந்தார்.
பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி அமெரிக்காவில் இந்த படத்தின் முதல் பிரீமியர் காட்சி திரையிடப்பட இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மார்ச் 29ம் தேதி மாலை 6 மணி அளவில் இந்த பிரீமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். அதாவது இந்திய நேரப்படி அது மார்ச் 30 அதிகாலை 4 மணியாக இருக்கும். இதனை சரியாக கணித்தே இந்த நாளில் பிரீமியர் ஷோ தயார் செய்துள்ளனர். மேலும் ராம நவமி நாளில் வெளியாகவேண்டும் என்ற காரணத்துக்காக வழக்கமாக வெள்ளிக்கிழமை வெளியாகவேண்டிய படத்தை ஒரு நாள் முன்னதாகவே வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை கிளிக் ஆகிவிட்டால் படம் வேற லெவலுக்கு வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu