பத்து தல படத்தை ஏன் பார்க்க வேண்டும்? இதோ 5 காரணங்கள்!

பத்து தல படத்தை ஏன் பார்க்க வேண்டும்? இதோ 5 காரணங்கள்!
X
பத்து தல படத்தைப் பார்ப்பதற்கான ஐந்து காரணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. நாளை ரிலீஸ் ஆகும் இந்த படத்தை நாம் ஏன் காணவேண்டும்? மார்ச் 30ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படுவதால் இப்போதிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முன்பதிவு சீட்டுகள் ஆன்லைனில் விற்றுத் தீர்ந்துகொண்டு இருக்கின்றன. படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பும், வெளியீட்டு தரப்பும் படம் தரமானதாக இருப்பதாக கூறியிருப்பதும் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது. கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் சிம்புவுக்கு இது ஹாட்ரிக் ஹிட் ஆக அமையவுள்ளது.

கேங்ஸ்டர் திரைப்படம்


நீங்கள் கேங்ஸ்டர் திரைப்பட விரும்பி என்பதை நாங்கள் அறிவோம். உங்களுக்கு சண்டை, போர், துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட காட்சிகள் கொண்ட டான் திரைப்படங்கள் நிச்சயமாக பிடிக்கும். இதனை திரையரங்கில் சென்று ரசிக்கும்போதுதான் அதனுடைய முழு ஃபீலையும் அனுபவிக்க முடியும்.

சிம்பு இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்து அசத்தியிருக்கிறார். அதுவும் கன்னியாகுமரி பகுதியில் எடுக்கப்பட்ட படம், இந்த படம் முழுக்க சிம்பு கறுப்பு உடையிலேயே வருகிறார்.

கிருஷ்ணா இயக்கம்


ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை ஒரிஜினலிலிருந்து கொஞ்சம் அடித்தளத்தை எடுத்துக் கொண்டு படத்தின் பல காட்சிகளை மாற்றியமைத்து சிம்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக அமைய வேண்டும் கௌதம் கார்த்திக் தான் படத்தின் ஹீரோ என்பதையும் உணர்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒரிஜினல் கதையின் வீரியம் குறையாமல் அதை விட பெட்டராக செய்திருப்பதாக செவி வழி செய்திகள் வருகின்றன. மேலும் இதன் திரைக்கதையில் கிருஷ்ணா செய்துள்ள ஒரு சில மாற்றங்கள் ரசிகர்களுக்கு மிகுந்த சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏ ஆர் ரஹ்மான்


ஏ ஆர் ரஹ்மானின் இசையை நீங்கள் முழுமையாக அனுபவிக்க விரும்பினால் நிச்சயம் இந்த படத்தை தியேட்டரில் காண வேண்டும். ஏற்கனவே வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்கும் இவர் தான் இசையமைத்திருந்தார். சிம்பு படம் என்றாலே இவரின் முழுத்திறனையும் இசையில் காண்பித்து படத்தின் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையையும் வெளுத்து வாங்கிவிடுவார்.

படம் முழுக்க சண்டைக் காட்சிகள் இருப்பதால் நிச்சயம் இசை அந்த காட்சிகளை எலிவேட் செய்து தூக்கி விடும் என்பதில் ஐயமில்லை.

கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர்


நீங்கள் பிரியா பவானி ஷங்கரின் ரசிகராக இருக்கலாம். அதே நேரம் மிகப் பெரிய நடிகர்களான முத்துராமன், கார்த்திக் ஆகியோரின் வீட்டிலிருந்து வந்த கௌதம் இப்போது வரை தனது திறமையை நிரூபிக்க போராடி வருகிறார். தான் ஒரு நடிகர் என்பதை இந்த உலகுக்கு நிரூபிக்க படாத பாடு பட்டு வருகிறார். இந்த படத்துக்கு பிறகு இவரை கோலிவுட் அங்கீகரிக்கும்.

கௌதம் மேனன்


வந்துட்டார்ரா தலைவரு என்று கௌதம் மேனன் கன்னிகள் படத்தைக் கொண்டாடுவது ஒரு புறம் இருக்கட்டும். தனது படத்திலேயே மிக அழகான காட்சிகளை வைத்திருக்கும் கௌதம் அதை அவரே நடித்து காட்டி பெறுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சில காட்சிகளுக்கு அவரே நடித்தால் எப்படி இருக்கும். அதுவும் ரொமாண்டிக் படங்களை எடுத்து மிரட்டிய கௌதம் இதில் வில்லத்தனம் செய்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்க நாம் திரையரங்கு செல்லவேண்டும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்