'பத்து தல' - நடிகர் சிலம்பரசனின் ரசிகர்களுக்கான டிசம்பர் விருந்து..!

பத்து தல - நடிகர் சிலம்பரசனின் ரசிகர்களுக்கான டிசம்பர் விருந்து..!
X

பத்து தல பட போஸ்டர்.

நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள, 'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதியை அப்படத்தின் தயாரிப்புத் தரப்பு வெளியிட்டது.

நடிகர் சிலம்பரசனின் படங்கள் கடந்த காலங்களில் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், 'மாநாடு' படம் வெளியாகி சிலம்பரசனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து, வசூலிலும் சிலம்பரசனின் படங்களில் 100 கோடியைத் தாண்டி வசூலில் கொண்டாட்டம் கொடுத்த முதல் படம் என்கிற பிரேக்கைத் தந்தது.

இந்தநிலையில், சிலம்பரசனின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர் அவரது ரசிகர்கள். அந்தவகையில் கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவது முறையாக நடிகர் சிலம்பரசன் இணைந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியானது.

மேலும், அமெரிக்காவுக்கு உயர் சிகிச்சைக்காக சென்ற நடிகர் சிலம்பரனின் தந்தையும் இயக்குநர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிகிச்சை முடிந்தது. நலமுடன் உள்ள அவர் சென்னை திரும்பியதும் படத்தின் புரமோஷன் வேலைகளில் சிலம்பரசன் ஈடுபடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த அறிவிப்பாக, சிலம்பரசன் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கிருஷ்ணா இயக்கியுள்ள 'பத்து தல' படம் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை படத்தின் தயாரிப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். இது கன்னட திரைப்படமான 'மஃப்டி' படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக் படமாகும்.

'வெந்து தணிந்தது காடு', மற்றும் 'பத்து தல' ஆகிய இரண்டு படங்களின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி வெளியானதில் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா