சூரி நடத்திய பரோட்டா சேலஞ்ச்!

சூரி நடத்திய பரோட்டா சேலஞ்ச்!
X
பரோட்டா சாப்பிடுவதுதான் முடியவில்லை கவிதையாவது சொல்வோம் என்று அவர்களில் ஒரு இளைஞர் சூரிக்காகவே கொண்டு வந்த கவிதையை வாசித்தார்.

விடுதலை படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் நடிகர் சூரி. சூரி ஃபேன்ஸ் கூடும் நிகழ்ச்சியாக இது காட்டப்பட்டது.

வழக்கம்போல பலரையும் உட்கார வைத்து சூரியை பேட்டி எடுத்தனர். அவரும் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒரு பகுதியாக பரோட்டா சேலஞ்ச் ஒன்றை நடத்தினார்கள். அதில் மூன்று இளைஞர்கள் கலந்து கொண்டனர். யூடியூப் சேனலின் தொகுப்பாளர் அவர்களை வரவழைத்து அமர வைத்தார்.

அங்கு பெரிய பெரிய பரோட்டாக்கள் கொண்ட ஹாட்பாக்ஸ் கொண்டு வரப்பட்டன. அனைவரது இலையிலும் ஒரே எண்ணிக்கையிலான பரோட்டாக்கள் அடுக்கப்பட்டன. அவர்கள் அதைப் பார்த்து மலைத்துப் போயினர்.

கவுண்டவுன் தொடங்கியதும் பரோட்டா சாப்பிடத் தொடங்கினர் மூவரும். தொடக்கம் முதலே விறுவிறுப்பாக போன இந்த நிகழ்ச்சியில், அவ்வப்போது சூரியும் கவுண்டர் அடித்து கலாய்த்துக் கொண்டிருந்தார்.

வந்திருந்த இளைஞர்கள் வதக் வதக் என அனைத்து பரோட்டாக்களையும் அடித்து துவைத்து வாயில் போட்டு திணறடித்தனர். இரண்டு, மூன்று பரோட்டாக்கள் போக போக அவர்களால் அதை ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. மிகவும் ஃபன்னாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.

பரோட்டா சாப்பிடுவதுதான் முடியவில்லை கவிதையாவது சொல்வோம் என்று அவர்களில் ஒரு இளைஞர் சூரிக்காகவே கொண்டு வந்த கவிதையை வாசித்தார். அவரின் கவிதையைப் பாராட்டிய சூரி, அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார். மற்ற இருவருக்கும் வாழ்த்து சொல்லி வழியனுப்பினர்.

நிகழ்ச்சியின் முடிவில் சூரிக்கு பரிசு வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!