திடீர் முடிவெடுத்த முல்லை... அழுதுகொண்டே இருக்கும் தனம்.. கோபப்பட்ட மூர்த்தி!

திடீர் முடிவெடுத்த முல்லை... அழுதுகொண்டே இருக்கும் தனம்.. கோபப்பட்ட மூர்த்தி!
X
முல்லை தான் கதிருடனேயே இந்த வீட்டில் இருக்கிறேன் என்று கூற, அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவோ முயற்சிக்கிறார் அவளது அம்மா. ஆனால் அவள் போக மறுக்கிறாள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் 24 ஏப்ரல் 2023 | pandian stores today episode 24 april 2023


பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடரின் இன்றைய தின எபிசோடில் அமர்க்களமாகிறது மண்டபம். இதனால் குடும்பம் மீண்டும் பிரிகிறது. முல்லைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நன்றாக நடந்து முடிந்ததும், அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றனர் ஜீவாவும் அவரது மனைவி மீனாவும். மண்டபத்தை விட்டு வீட்டுக்குச் செல்லும் அவர்களை கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு போங்கள் என்கிறாள் தனம். ஆனால் அப்பாவுக்கு உடம்புக்கு முடியல அதனால நாங்க போயாகணும் என்று கூறிவிட்டு செல்கிறாள் மீனா. ஜீவாவும் உடன் செல்கிறான்.

தனம் மீண்டும் ஜீவாவிடம் பேச போக, உடனே ஜீவா எரிச்சலடைந்து தயவு செய்து என்னை மீண்டும் வீட்டுக்கு அழைக்காதீங்க என்று சொல்ல, அதற்கு பதிலளித்த தனம் நான் அதற்காக இப்போது வரவில்லை. நீ நல்லா சாப்புடுறதானே என்று விசாரிக்க நினைத்தேன் என்கிறாள்.

அதற்கு பதில் சொல்லாமல் ஜீவா கிளம்பிவிட தனம் அழுது கொண்டிருக்கிறாள். தனம் அழுவதைப் பார்த்த முல்லையின் அம்மா, அவளை சீண்டுகிறாள். என்ன தனம் கொழுந்தன் வரலியே என அழுத, கொழுந்தன் வந்ததுக்கும் அழுத, இப்ப போயிட்டனு அழுகுற இப்படி அழுதுட்டே இருக்கியே என திட்டுகிறாள்.

ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்ட ஐஸ்வர்யாவுக்கு யார் பேறுகாலம் பார்ப்பார்கள் என பேச்சு அடிபட அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான் கண்ணன். மீண்டும் மீண்டும் மல்லி இதுகுறித்து பேசிக்கொண்டே இருக்கிறாள். அவளது வாயை அடைக்க ஏன் நாங்கதான் இருக்கோமே நாங்க பாத்துக்குறோம் என்று தனம் கூறுகிறாள். அதற்கு ஐஸ்வர்யா எரிச்சலில் எங்களுக்காக பரிதாபப்பட்டு பார்க்கத் தேவையில்லை என்று எடுத்தெறிந்து பேசுகிறாள்.

கதிரும் முல்லையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க அனைவரும் ஆங்காங்கே ஜாலியாக இருக்கிறார்கள். கண்ணனும் ஐஸ்வர்யாவும் கிளம்பிச் செல்கிறார்கள். அங்கு வந்த மூர்த்தி தனத்திடம் பாரு தனம் ஏதோ சொன்ன.. எல்லாரும் இங்கேயே இருப்பாங்கன்னு.

எல்லாரும் வந்தாங்க.. ஃபங்ஷன சிறப்பா பண்ணாங்க..கிளம்பிட்டாங்க. என்கிறான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தனத்தின் அம்மா, தன் மகள் இந்த குடும்பத்துக்காக உழைத்து உங்களுக்காகவே அழுது அழுது தன்னோட வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கா என்று கூற மூர்த்தி பேசமுடியாமல் வாயடைக்கிறான்.

முல்லை தான் கதிருடனேயே இந்த வீட்டில் இருக்கிறேன் என்று கூற, அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவோ முயற்சிக்கிறார் அவளது அம்மா. ஆனால் அவள் போக மறுக்கிறாள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் 25 ஏப்ரல் 2023 | pandian stores today episode 25 april 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!