Pandian Stores விபத்துக்குள்ளான கார்... பரிதவிக்கும் ஜீவா, மீனா!
இன்றைய எபிசோட்
மீனாவின் அப்பா, மூர்த்தியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனைப் பார்த்ததும் மூர்த்தி என்ன இவர் வந்திருக்கிறார் என தனத்திடம் கேட்கிறார். அப்போது தனம் ஏதோ சொல்ல, வந்தவரை அழைத்து உட்காரச் சொல்லி உபசரிக்கின்றனர்.
எல்லாரும் விசேசமாக இருக்கும்போது ஒரு எட்டு வந்த பாக்கலன்னா நல்லா இருக்காதுல்ல என்கிறார் மீனாவின் அப்பா.
மூர்த்தி உன் விசேசத்ததான் நான் எதிர்பார்க்கவே இல்ல என்று கூறி மூர்த்தியையும் தனத்தையும் சங்கடப்படுத்துகிறார் அவர். அடுத்து அவர் முல்லையை நலம் விசாரிக்கிறார். முல்ல நீ நல்லா இருக்கியாம்மா என்கிறார். நீதான் குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்ட என்று வருந்துவது போல கேட்கிறார். நீ ரொம்ப நல்லா இருக்கணும் நல்லா இருப்பம்மா என்று வாழ்த்துகிறார்.
உடனே இடைமறித்த தனம், ஆமா சித்தப்பா எல்லார விடவும் இவ உண்டாகியிருக்கிறதுதான் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்று கூறுகிறாள். இதனால் அனைவரும் மகிழ்கின்றனர். உடனே மீனாவின் அப்பாவும் மகிழ்ந்தது போல முகத்தை வைத்துக் கொள்கிறார்.
குக்கர் விசில் அடிக்கும் சத்தம் கேட்டதும் தனம் எழுந்து அவசரமாக அடுப்படிக்கு செல்லமுயல் கிறாள், ஆனால் மீனாவோ இருங்கக்கா இருங்க நா பாத்துக்குறேன் என்று கூறுகிறாள். நா போயி எடுத்துட்டு வந்துடுறேன் என அவள் உள்ளே செல்கிறாள்.
முன்னமே நடந்த பிரச்னை பற்றி மூர்த்தியும் மீனா அப்பாவும் பேசிக்கொள்கின்றனர். வருத்தம் தெரிவித்த மூர்த்தி தான் வேண்டுமென்றே அப்படி நடக்கவில்லை நடந்த விசயத்தை உங்களிடம் சொல்லி ஆக வேண்டுமே என்று உண்மையைக் கூறிவிட்டேன் என்கிறார். உடனே மீனாவின் அப்பா திருமணத்துக்கு சந்தோஷமாக வாங்க என்று அழைக்கிறார்.
மேலும் தன் மகள் மீனாவிடம் அவர் இங்கு செய்துகொண்டிருக்கும் வேலைகளைப் பற்றி கவலை கொள்கிறார். தன் இடத்தில் இருந்து பார், பெத்த மகளை இப்படி கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். ரோட்டுல போயி தண்ணி எடுக்குறதும், இத்தன பேருக்கு சமச்சி கொட்டுறதும்னு வருத்தப்படுகிறார். பேசிக்கொண்டிருக்கும்போதே மனம் வெதும்பி அழுகிறார். நான் இந்த வீட்டுக்கு வரும்போதெல்லாம் நீ கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை. நா சாகறதுக்குள்ள ஒரு தடவயாச்சும் நீ சந்தோஷமாக இருக்குறத பாத்துடனும்னு சொல்றார்.
இந்த பக்கம் மீனாவும் அவரது கணவர் ஜீவாவும் காரில் செல்கிறார்கள், உடன் கண்ணனும் இருக்கிறான். அண்ணே நீயும் அண்ணியும் தனியா போகும்போது போடவேண்டிய பாட்டுண்ணே இது. நானும் இருக்கேன்ல பாட்ட மாத்து. நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒன்னா கார்ல ஒரு லாங் டிரைவ் என்று பேசிக்கொண்டே இருக்கையில் ஒருவன் பைக்கில் வந்து காரில் விழ, கார் டேமேஜ் அடைகிறது. நல்லவேளை பைக்கில் வந்தவனுக்கு பிரச்னை இல்லை. ஆனால் கார் டேமேஜுக்கு என்ன சொல்ல போகிறார்களோ என ஜீவா பயப்படுகிறான்.
கதைச் சுருக்கம்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கூட்டுக் குடும்பத்தின் மகிழ்ச்சி, துன்பம், வாழ்க்கை, கனவு, சோகம், துக்கம் என அனைத்தையும் சொல்லும் விதமாக விளங்கிவரும் தொடராகும். அடுத்தடுத்த நாட்களில் மகிழ்ச்சியான பல விசயங்களையும் கொண்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
அண்ணன், தம்பிகள் மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டில் வாழ வந்திருக்கும் அண்ணன், தம்பிகளின் மனைவிமார்களும் ஒற்றுமையாக இருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் மூலம் விரிசல் ஏற்படுவதும் அவர்களின் பாசப்பிணைப்பு அதனைத் தாண்டி ஒற்றுமையுடன் இருக்கச் செய்வதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் வெற்றி.
எவ்வளவு தான் சோதனைகள் வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் வாழ்வதன் ரகசியம் இந்த தொடரில் சிறப்பாக காட்டப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது.
விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கிற்கு அடித்தளமாக விளங்கும் சீரியல்களுள் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இவர்கள் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருப்பது நமக்கும் குடும்பத்தில் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஆசையை ஏற்படுத்தி விடுகிறது.
வழக்கம் போலவே குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் இடையில் புகுந்து அதனை சீர்குலைக்கும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் சூழ்ச்சியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் கதைக்களமும் நிறையவே அமைந்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்.
மூத்த அண்ணன் மூர்த்தியும் அண்ணி தனமும் இந்த குடும்பத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். எந்த பிரச்னையையும் இவர்களே முன்வந்து சமாளித்து சமாதானம் செய்து தீர்த்து வைக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu